ஆனி மாத ராசி பலன்: மகர ராசிக்கு தீரப்போகும் முக்கிய பிரச்சனை.. 3 விஷயங்களில் கவனம்
ஆனி மாத ராசி பலன் 2026: ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த ஆனி மாதத்தில் மகர ராசியினருக்கான அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன. மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. மேலும், புதன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பத்ர ராஜயோகமும் அமைகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், மகர ராசியினருக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த ஆனி மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கவுள்ள பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியினருக்கு பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். எதிரிகளிம் சமாதானம் உண்டாகும். பெரிய கெளரவங்கள் ஏற்படும். சூரியன் 6 ஆம் இடத்தில் இருப்பதால் நிறைய நன்மைகள் காணப்படும். சூரியன் 6 ஆம் இடத்தில் இருப்பதால் நிறைய நன்மைகள் நடக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.
வாக்குவாதம் வேண்டாம்
அப்பா, அம்மாவிடம் வாக்குவாதங்கள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. முதுகுத்தண்டுவடத்தில் சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வளர்ப்பு பிராணிகளிடம் விளையாடுவது, குதிப்பது, விளையாடும்போது கவனமாக இருக்க வேண்டும். விஷ வண்டுக்கள், பூச்சிகள் கடிப்பதற்கான வாய்ப்புள்ளது. வெளிச்சம் இல்லாத பகுதிகளில் கவனம் தேவை. மறைமுக எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.
லாபம் கொட்டும்
வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். லாபம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சந்தோஷம், அனுகூலம் காணப்படும். தைரியம் ஏற்படும். புதிய விஷயங்கள் உண்டாகும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும் யோகம் உண்டு. புதிய விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நல்லவை நடக்கும்.
வழிபாடு
இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். துணை விஷயத்தில் இணக்கமாகச் செல்வது நன்மை பயக்கும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். நிறைய நன்மைகள் நடக்கும் நல்ல காலகட்டம். புதிய முயற்சிகள் ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். படபடப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விநாயகர் வழிபாடு உங்களுக்கு சகலவித நன்மைகளைத் தரும்.












Click it and Unblock the Notifications