17 லட்சம் ஓட்டுதான் வித்தியாசம்.. சிவசங்கர் பேச்சுக்கு சூட்டோடு சூடாக சட்டசபையில் அருண்ராஜ் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், திமுக மற்றும் தவெக இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 17 லட்சம் மட்டுமே என கூறினார். இதற்கு “தவெக தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்குகளையும், கூட்டணி கட்சிகளுடன் திமுக பெற்ற வாக்குகளையும் ஒப்பிட முடியாது என்று அமைச்சர் அருண்ராஜ் சூட்டோடு சூடாக உடனே பதிலடி கொடுத்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனித்து போட்டியிட்டது. 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அந்த கட்சி தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதேபோல, அதிமுகவும் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொண்டது. சீமான் தனித்து போட்டியிட்டார்.

Arunraj Hits Back at Sivasankar in Assembly Over 17 Lakh Vote Difference Remark

சட்டசபை கூட்டத் தொடர்

பலமான 4 முனை போட்டி நிலவிய நிலையில், தவெக வெற்றி பெற்று வியக்க வைத்தது. சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பரப்பி தவெக ஆட்சியை பிடித்ததாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் முன்வைத்து வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தவெக ஆட்சி அமைத்த பிறகு கடந்த 18 ஆம் தேதி சட்டசபை கூட்டம் கூடியது.

முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். நேற்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், தவெக - திமுக எம்.எல்.ஏக்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது சில நேரங்களில் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படவில்லை. இதன் பிறகு மாலையில் சில வீடியோக்கள் வெளியாகின. இதில், சட்டசபையில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேச்சுக்கு தவெக அமைச்சர் அருண்ராஜ் உடனடியாக பதிலளித்தது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

17 லட்சம் வாக்குகள் தான்

சட்டசபையில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், "நல்லதுகளை வரவேற்றும், அல்லதுகளை சுட்டிக்காட்டுவதும் தான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமையாகும். திமுகவுக்கும், தவெகவுக்கும் உண்டான வாக்குகள் வித்தியாசம் வெறும் 17 லட்சம் மட்டும்தான்" என கூறினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:- "வெறும் 17 சதவீதம் வாக்குகள் தான் திமுகவுக்கும், தவெகவுக்கும் வித்தியாசம் என கூறினார். எந்த சூழலில் இந்த வாக்குகள் எங்களுக்கு கிடைத்தது என்பது மக்கள் அறிவார்கள். தவெக தனித்து நின்று பெற்ற வாக்குகளையும், திமுக பல கட்சி கூட்டணிகளுடன் பெற்ற வாக்குகளையும் ஒப்பிடுவது மிக மிக பொருத்தமாக இருக்காது.

எங்க கட்சிக்கு கிடைத்த வாக்குகள் மட்டுமே

நாங்கள் பெருமையாக சொல்வோம், எங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்குகளும் தவெக என்ற எங்க கட்சிக்கும், தலைவர் விஜய் முதல்வராக வர வேண்டும் என்பதற்காக விழுந்த வாக்குகள் தான். ஆனால் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவுக்கு கிடைத்த வாக்குகள் உங்க கட்சிக்கு மட்டுமே கிடைத்த வாக்குகள் அல்ல. திமுகவுக்கு விழுந்த வாக்குகள் கூட்டணி கட்சிகளுக்காகவும் விழுந்த வாக்குகள் என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+