பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முஸ்லீம்கள் பற்றி தப்பாக ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.. கடும் நடவடிக்கை பாயும்.. எடியூரப்பா அதிரடி

Google Oneindia Tamil News

பெங்களூர்: கொரோனா வைரஸ் பரவுவதற்கு, முஸ்லீம் சமுதாயத்தினரை பொறுப்பாளிகள் என்பதுபோல யாராவது பேசினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு ஒன்றில் பங்கேற்று திரும்பியவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Action will be taken if anyone speaks against Muslims: BS Yeddyurappa

இந்த நிலையில் குறிப்பிட்ட மதப் பிரிவினருக்கு எதிராக பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் பொது வெளிகளில் பேசப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

கர்நாடகாவிலும், ஆளும் பாஜகவைச் சேர்ந்த பல பிரமுகர்கள் இவ்வாறான கருத்துக்களை பேசி வந்தனர். இந்த நிலையில் செய்தி சேனல் ஒன்றுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார் எடியூரப்பா. அப்போது இதுபோன்ற பேச்சுக்களுக்கு அவர் கடும் எச்சரிக்கையை பிறப்பித்துள்ளார்.

நுரையீரல் மட்டுமல்ல.. வேறு இடத்திற்கும் குறி வைக்கும் கொரோனா.. விலகாத மர்மம்.. மருத்துவர்கள் தவிப்புநுரையீரல் மட்டுமல்ல.. வேறு இடத்திற்கும் குறி வைக்கும் கொரோனா.. விலகாத மர்மம்.. மருத்துவர்கள் தவிப்பு

முஸ்லிம் அமைப்புகளுடன் சமீபத்தில் நான் ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது மசூதிகளில் தொழுகை நடத்த மாட்டோம். இப்படி ஒரு முடிவை நாங்கள் எடுப்பது இதுதான் முதல் முறை என்று அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக முஸ்லீம் பிரதிநிதிகள் உறுதி அளித்துள்ளனர். வீட்டிலேயே தொழுகை நடத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

Recommended Video

    கொரோனாவால் குறைந்த குற்றசெயல்கள்

    எனவே, சிறுபான்மை முஸ்லீம் சமூகம் குறித்து, யாரும் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. ஒரு சில சம்பவங்கள் நடைபெற்றதால், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் அதற்கு பொறுப்பு என்பது போல நீங்கள் பேசினால், அப்படி பேசுவோர் மீது, இந்த அரசு கடும் நடவடிக்கையை எடுக்கும். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    English summary
    Karnataka Chief Minister Yeddyurappa has warned that if anyone speaks as if Muslims are responsible for the spread of coronavirus, they will be dealt with strict action.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X