நடிகர், நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை.. விவேக் ஓபராய் மைத்துனர் ஆதித்யா ஆல்வா சென்னையில் கைது
பெங்களூர்: கன்னட திரையுலகத்துடன் தொடர்புள்ள போதைப்பொருள் வழக்கை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆதித்யா ஆல்வா என்பவரை, சென்னையில் திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
பெங்களூர் நகர இணை போலீஸ் கமிஷனர் (குற்றப் பிரிவு) சந்தீப் பாட்டீல் கைது நடவடிக்கையை உறுதி செய்துள்ளார்.
கன்னட திரையுலகின் நடிகர், நடிகைகள் சிலருக்கு ரேவ் பார்ட்டிகள் ஏற்பாடு செய்து போதை மருந்து சப்ளை செய்த வழக்கை சிசிபி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தலைமறைவு
கடந்த வருடம் செப்டம்பர் மாதம், இந்த வழக்கில், ஆதித்யா ஆல்வா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் அப்போது முதல் தலைமறைவாக இருந்து வந்தார். முன்னாள் கர்நாடக அமைச்சர் மறைந்த, ஜீவராஜ் ஆல்வாவின் மகன்தான் இந்த ஆதித்யா. மேலும் பிரபல நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனரும் ஆகும். இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக ஆதித்யா பெயர் உள்ளது.

ராகிணி திவேதி கைது
இது தொடர்பாக முன்னணி நடிகை ராகிணி திவேதி போன்றோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில்தான், சென்னையில் ஆதித்யா தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.

சென்னையில் கைது
இதையடுத்து அதிரடியாக சென்னை விரைந்த பெங்களூர் போலீசார், ஆதித்யா ஆல்வாவை கைது செய்து பெங்களூர் அழைத்து வந்துள்ளனர்.

விசாரணை
ஆதித்ய ஆல்வாவை பெங்களூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications