இன்ஜினியரிங்னா சும்மாவா? போலீஸ் துறையில் சம்பவம் செய்த இன்ஜினியர்கள்.. கெத்துனா இதுதான்.. செம
பெங்களூர்: இன்ஜினியர் என்றால் லேசாக நினைக்காதீங்க.. நாங்க இல்லாத இடமே இல்லை என்பதுபோல் அனைத்து துறைகளிலும் இன்ஜினியரிங் படித்தவர்கள் கால்பதித்து வரும் நிலையில் கர்நாடகாவில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
இன்ஜினியர்.. ஒரு காலத்தில் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இன்ஜினியர் இருந்தனர். ஆனால் இப்போது வீட்டுக்கு ஒருவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளனர் என்று கூறும் அளவுக்கு நிலைமை வந்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் மேல்படிப்பு மீதான ஆர்வம் அதிகரித்ததும், ஊருக்கு ஊர் இன்ஜினியரிங் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் தான் காரணம்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இன்ஜினியர்கள் நம் நாட்டில் படிப்பை முடிக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். ஆனாலும் இன்ஜினியரிங் படித்தவர்களில் ஒரு தரப்பினர் தங்களின் துறை சார்ந்த பணிகளுக்கு செல்வதை மறுக்க முடியாது.
அதேவேளையில் இன்னொரு தரப்பினர் பிற துறைகளில் கால்பதித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் விவசாயம், டீக்கடை, யூடியூப், விலாக்கர், பானிபூரி விற்பனையாளர் என்று சிறு வியாபாரம் முதல் பெரிய பெரிய தொழில்களில் இன்ஜினியரிங்கள் தடம்பதித்து வருகின்றனர். இதனால் தான் பானிபூரி விற்கனுமா? முதலில் இன்ஜினியரிங் படி; நடிகர் ஆகனுமா முதலில் இன்ஜினியரிங் படி; அரசியல்வாதியாக ஜொலிக்க வேண்டுமா முதலில் இன்ஜினியரிங் படி யூடியூப்பில் சக்சஸ் ஆகனுமா இன்ஜினியரிங் படித்துவிட்டு யூடியூப் சேனலை தொடங்கு என்று மீம்ஸ்கள் இணையதளங்களில் குவிந்து கிடக்கின்றன.
இது வேடிக்கையாக கூறினாலும் கூட இன்ஜினியர்கள் இல்லாத துறைகளே நம் நாட்டில் இல்லை என்பது தான் உண்மை. இதுதவிர பலரும் இன்ஜினியரிங் முடித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல் கடைசி நிலை அரசு பணியாளர்களாகவும் இன்ஜினியர்கள் முடித்து பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் கர்நாடகாவில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது கர்நாடகா போலீஸ் துறையில் புதிதாக 335 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி இருந்தது.
இதற்கான கல்வி தகுதி ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்வு முடிந்து ரிசல்ட் வெளியாகி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு 335 சப் இன்ஸ்பெக்டர்கள் கர்நாடகாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 239 பேர் ஆண்கள். 96 பேர் பெண்கள்.
இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் பணிக்கு தேர்வான 335 பேரில் 129 பேர் இன்ஜினியரிங் முடித்தவர்கள். அதாவது சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானவர்களில் அதிகமானவர்கள் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களாக உள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக 58 பேர் மாஸ்டர் டிகிரி முடித்தவர்களாக உள்ளனர். மேலும் பல் மருத்துவம் படித்த ஒருவரும் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வாகி உள்ளனர். அதுமட்டுமின்றி 33 பேர் பிற அரசு துறையில் பணியாற்றி சப் - இன்ஸ்பெக்டர் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார்












Click it and Unblock the Notifications