"எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது".. 22 வயது மாணவியை கொன்ற காதலன்.. ஷாக் பின்னணி
பெங்களூர்: பெங்களூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவியை கொன்ற வழக்கில் அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். கொலையான மாணவி இன்னொரு நபருடன் நட்பாக பழக தொடங்கிய நிலையில் எங்கே தன்னை விட்டு அவரை திருமணம் செய்து கொள்வாரா? என்று நினைத்து காதலன் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம் பிக்கிம்வாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவிஸ்ரீ(வயது 21). இவர் பெங்களூர் தம்மேனஹள்ளியில் வாடகைக்கு தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் தேவிஸ்ரீ தனது வீட்டில் பேச்சு, மூச்சின்றி கிடந்தார்.

அப்போது அவரது தோழி வந்தார். உடனடியாக தேவிஸ்ரீயை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி மாதநாயக்கனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரைண மேற்கொண்டனர். அப்போது தேவிஸ்ரீகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. யாரோ ஒருவர் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது அறைக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தேவிஸ்ரீயை பார்க்க அவரது காதலனான ஆந்திராவை சேர்ந்த பிரேம் வர்தன் வந்ததும், தற்போது அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிரேம் வர்தன் பின்னணி பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது தேவிஸ்ரீயும், பிரேம் வர்த்தனும் பிளஸ் 2 வரை ஒன்றாக படித்துள்ளனர். ஒரே பள்ளியில் படித்ததால் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. அதன்பிறகு இருவரும் கல்லூரிக்கு சென்றனர்.
தேவி ஸ்ரீ பெங்களூர் கல்லூரியில் சேர்ந்தார். இதனால் பிரேம் வர்தன் அடிக்கடி பெங்களூர் வந்து தேவிஸ்ரீயை சந்தித்து சென்றுள்ளார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் தேவிஸ்ரீ இன்னொருவருடன் நட்பாக பழகியதாக கூறப்படுகிறது. இது பிரேம் வர்தனுக்கு பிடிக்கவில்லை. எங்கே தேவிஸ்ரீ தன்னை கைவிட்டு விடுவாரா? புதிய நண்பரை கரம் பிடித்து விடுவாரா? என்று பிரேம் வர்தன் நினைத்துள்ளார்.
இதனால் புதிய நபரின் நட்பை விடும்படி கூறியுள்ளார். ஆனால் தேவிஸ்ரீ கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த 23ம் தேதி பெங்களூர் சென்ற பிரேம் வர்தன், தேவிஸ்ரீயை சந்தித்துள்ளார். அப்போது இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பிரேம் வர்தன், தேவிஸ்ரீயின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆகி உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து திருப்பதியில் பதுங்கி இருந்த பிரேம் வர்தனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications