சல்லி சல்லியாக நொறுங்கி.. அண்ணாமலைக்கு பெரிய அடி! தோல்வியில் முடிந்த கர்நாடக பார்முலா.. பதறும் தாமரை
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையின் பார்முலா அங்கே சரிவை சந்தித்துவிட்டதோ என்று என்ன தோன்றுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக இந்த முறை பல இளம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். பல சீனியர்களுக்கு வேட்பாளர்கள் பட்டியலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது அந்த கட்சிக்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது .

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. கர்நாடக அரசியல் 2024 லோக்சபா தேர்தல், தென்னிந்திய அரசியலை நிர்மாணிக்கும் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளது.
1 மாதமாக நடந்த பிரச்சாரம்.. காரசார விவாதம்.. அரசியல் மோதல்கள் எல்லாம் கர்நாடகாவில் முடிவிற்கு வந்துள்ளது. திருவிழாவிற்கு இணையாக கர்நாடகா சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.
இதுவரை கர்நாடகாவில் எண்ணப்பட்ட வாக்குகளில், பாஜக 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 118 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாஜக வேட்பாளர்:
இந்த தேர்தலில் பாஜகவின் துணை தேர்தல் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருந்தார். அதேபோல் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் இருவரும்தான் தேர்தல் பணி வியூகங்களை வகுத்தனர்.
வேட்பாளர் தேர்வு தொடங்கி பாஜகவின் தேர்தல் அறிக்கை, பிரச்சார வியூகம் என்று பல விஷயங்களை முடிவு செய்தது இவர்கள்தான்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் கிட்டத்தட்ட 4 கட்டமாக வேட்பாளர்களை பாஜக களமிறக்கிறது. அவர்களின் வேட்பாளர் தேர்வில் கவனிக்க வேண்டிய விஷயம் ,
பெரும்பாலும் புதிய முகங்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
பல முறை எம்எல்ஏக்களாக இருந்த சீனியர்கள் துரத்தப்பட்டு உள்ளனர்.
சில மாஜி அமைச்சர்கள் கூட வாய்ப்பு பெறவில்லை.
பாஜக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில் கிட்டத்தட்ட 90 பேர் புது முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஸ்க்:
அங்கே பாஜகவிற்கு எதிரான அலை நிலவிக்கொண்டு இருக்கும் நிலையில் நிறைய புது முகங்களை இறங்கி அண்ணாமலை - பிஎல் சந்தோஷ் ஷா ரிஸ்க் எடுத்துள்ளனர். எம்எல்ஏக்களாக இருக்கும் பலர் கழற்றிவிடப்பட்டு உள்ளதால், அங்கே காவிகள் இடையே கொஞ்சம் கலக்கமான சூழ்நிலையும் நிலவியது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையின் பார்முலா அங்கே சரிவை சந்தித்துவிட்டதோ என்று என்ன தோன்றுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக இந்த முறை பல இளம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். பல சீனியர்களுக்கு வேட்பளார்கள் பட்டியலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது அந்த கட்சிக்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது .

அண்ணாமலை எடுத்த பார்முலா கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது.
கலகாதகியில் சிஎம் நிம்பண்ணவர், முடிகெரேயில் எம்பி குமாரசாமி, ஹாவேரியில் நேரு ஓலேகர், சன்னகிரியில் விருபாக்ஷப்பா ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இதில் விருபாக்ஷப்பா மீது ஊழல் புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கோட்டையான பழைய மைசூர் பகுதியில் பாஜக பெரும்பாலும் ஏற்கனவே இருக்கும் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது, அதோடு அங்கே தோல்வி அடைந்த இடங்களில் மட்டும் புதிய முகங்களை மீண்டும் களமிறக்கி உள்ளது.
கடலோரப் பகுதிகளில்தான் பாஜக கொஞ்சம் ரிஸ்க் எடுத்துள்ளது, ஏனென்றால் அங்கே பாஜகவிற்கு ஏற்கனவே நல்ல ஆதரவு உள்ளது.
வேட்பாளர்கள்:
பெங்களூரு முன்னாள் போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் சாமராஜ்பேட்டையிலும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் பிபிஎம்பி கமிஷனருமான அனில் குமார் கொரட்டகெரே தொகுதியிலும் போட்டியிட்டனர்.
பாஜக எம்எல்ஏவும் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர் அசோக் தனது சொந்த தொகுதியான பத்மநாபநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகிறார், மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரை எதிர்க்க ஆர் அசோக் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
இன்னொரு பக்கம் வருணா தொகுதியில் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவை எதிர்த்து எம்.எல்.ஏ.வும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான வி.சோமன்னா போட்டியிடுகிறார். சோமன்னா இன்னொரு பக்கம் சாமராஜ்நகரிலும் போட்டியிடுகிறார். இரண்டு முக்கிய தலைவர்களுக்கு எதிராக அங்கு அமைச்சர்கள் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரசின் இரண்டு முக்கிய தலைவர்களும் வெற்றிபெற கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது தெளிவாகிறது. ஆனால் இரண்டு காங்கிரஸ் தலைவர்களும் அவரவர் இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
தோல்வி?
கிட்டத்தட்ட பாஜக சீனியர்கள் பலர் ஒதுக்கப்பட்டது பெரிய ரிஸ்க் விஷயமாக பார்க்கப்படுகிறது. இதுவே பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.
பிஎல் சந்தோஷ், அண்ணாமலை இருவரும், பழைய அரசியல் தலைவர்களை ஓரம்கட்டிவிட்டு புதியவர்களுக்கு அதிக சீட் கொடுத்து உள்ளனர். புது ரத்தம் பாய்ச்ச எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்து உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications