நிர்வாண போட்டக்களை பகிர்ந்த சென்னை மருத்துவர்! பிளான் போட்டு அடித்தே கொன்ற காதலி! மிரண்ட பெங்களூர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன்பு 27 வயதான மருத்துவர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் அரங்கேறி உள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த வாரம் மோசமான காயங்களுடன் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். சிகிச்சை தொடங்கிய உடனேயே அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார்.

இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அதில் அவர்களுக்குப் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

சென்னை மருத்துவர்

சென்னை மருத்துவர்

அந்த மருத்துவரின் மரணம் தொடர்பாக போலீசார் நடத்தி விசாரணையில், அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணே அவரது மரணத்திற்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. உயிரிழந்த 27 வயதான டாக்டர் விகாஸ் ராஜன் சென்னையை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உக்ரைனில் மருத்துவ பட்டப்படிப்பை முடித்த அவர், முதலில் சில காலம் சென்னையில் மருத்துவராக இருந்தார். அதன் பின்னர், அவருக்குப் பெங்களூரில் வேலை கிடைத்துவிடவே அவர் அங்குச் சென்றுள்ளார்.

லிவ் இன்

லிவ் இன்

மேலும், அவர் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து வந்துள்ளார். இதற்கிடையே இரு ஆண்டுகளுக்கு முன்பு, சமூக வலைத்தளம் மூலம் கட்டிடக் கலைஞரான பிரதிபா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. ஒருவருக்கு ஒருவர் பிடித்துப் போகவே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட நிலையில், இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

உயிரிழந்தார்

உயிரிழந்தார்

இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் மோசமான காயங்களுடன் ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கோமா நிலைக்குச் சென்ற நிலையில், மூன்று நாட்களில் பலியானார். அதிக காயம் இருந்ததால் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அப்போது தான் ​​​​27 வயதான அவரது வருங்கால மனைவி மற்றும் அவரது நண்பர்கள் டாக்டர் ராஜனைத் தாக்கியதும் பின்னர் அவர்களே மருத்துவமனையில் அட்மிட் செய்ததும் தெரிய வந்தது.

 நிர்வாண படங்கள்

நிர்வாண படங்கள்

இது தொடர்பாகத் தென்கிழக்கு பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா கூறுகையில், "அந்த பெண் இன்ஸ்டாகிராமில் தனது நிர்வாண படங்களைப் பார்த்துள்ளார். அதிர்ந்து போன அவர், இது தொடர்பாக விகாஸை கேட்டுள்ளார். ​​போலி ஐடியை உருவாக்கி, விளையாட்டாக நிர்வாண படங்களைப் பகிர்ந்தாக அவர் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த பெண், விகாஸுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளார்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

அதே நாளில், அதாவது செப். 10ஆம் தேதி, நண்பர்கள் சந்திக்கச் செல்லாம் எனக் கூறி விகாஸை அந்த பெண் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மது அருந்திக் கொண்டு இருந்த போது, திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அது அப்படியே கைகலப்பாகவும் மாறி உள்ளது. அந்த பெண் தனது நண்பர்களுடன் சேர்ந்து விகாஸை கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில் விகாசுக்கு மிக மோசமாகக் காயம் ஏற்பட்டு உள்ளது.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

இதையடுத்து அந்த பெண்ணே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருப்பினும் அங்குச் சீக்கிரம் அவர் கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் முதலில் அந்த பெண் பொய் சொல்லியுள்ளார். இருப்பினும், போலீசின் கிடிக்குப்பிடி விசாரணையில் உண்மை தெரிய வந்தது. இந்த விஷயத்தில் அந்த பெண் மற்றும் அவரது மூன்று நண்பர்களும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+