கண்ணிமைக்கும் நேரத்தில் நொறுங்கிய அப்பார்ட்மென்ட்.. பெங்களூரில் கனமழையால் கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
பெங்களூர்: பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும்நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் 4 ஆக உயர்ந்துள்ளது. 17-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் பெங்களூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. பெங்களூரின் சிவாஜிநகா், அல்சூர், மாகடி ரோடு, ராஜாஜிநகா், மேக்ரி சா்க்கிள், விஜயநகா், ஹெப்பால், எலகங்கா, சாந்திநகா், பையப்பனஹள்ளி, எம்.ஜி.ரோடு பகுதிகள் முழுவதுமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.

வெள்ள நீர்: முக்கியமாக, எலகங்கா, மேக்ரி சா்க்கிள் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீரில் மூழ்கி கிடக்கின்றன.. எனவே எங்கே திரும்பினாலும் வெள்ள நீர் தேங்கி கிடக்கிறது.. தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. பல்வேறு சுரங்கங்களில் மழைநீர் புகுந்துவிட்டன.. தேங்கும் நீரிலும், தாழ்வான பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், டிராக்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனா்.
இதையத்து, பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ள பாதிப்புகளை கண்காணித்து வருகின்றனா். மேலும் முடிந்த வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
கட்டிடம்: இதற்கு நடுவில், புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் கர்நாடகாவை நிலைகுலைய வைத்து வருகிறது.. பெங்களூர் பாபுசாபாளையா பகுதியில், இந்த புதிதாக 6 மாடி அப்பார்ட்மென்ட் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஏராளமானோர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்..

கட்டிட பணியில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக அவர்கள் கட்டிடத்தின் உள்ளேயே குடும்பத்துடன் தங்கி இருந்திருக்கிறார்கள்.. தரைத்தளம் மற்றும் 6 மாடிகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் தற்போது நடந்து கொண்டிருந்தது. இந்த பணியில் சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
தொழிலாளர்கள்: அப்போது, இந்த கட்டிடம் பயங்கர சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்துவிட்டது. இதில், தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதைப்பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து, மீட்பு நடவடிக்கைகள் துரிதமாயின...
இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் 17 பேர் சிக்கியிருப்பதாக முதலில் தகவல் வெளியாகி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.. இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளதாகவும், மற்றவர்கள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியதை தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
பலி எண்ணிக்கை: இப்போது மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.. . 17-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மழைநீர் தேங்கியிருப்பதாலும், தொடர் மழை காரணமாகவும் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக இந்த அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 10க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த விபத்திற்கு கனமழைதான் காரணமா? அல்லது கட்டிடம் தரமற்று இருந்ததா? என்ற பல கோணங்களில் விசாரணையை துவங்கியிருக்கிறார்கள். கட்டிட உரிமையாளர் இன்ஜினியர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
கட்டிடங்கள்: இந்த கட்டிடம் சரிந்து விழுந்த இடத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல தேங்கியிருக்கிறது... மீட்பு பணியில் போலீசார், தீயணைப்பு மீட்பு படையினருடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் களத்தில் இறங்கியுள்ளனர்... இன்றும் மழை தொடரும் என்பதால், பெங்களூர் மாநகராட்சி, முழுவீச்சில் இறங்கியிருக்கிறது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications