ஆளே அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த கர்நாடக பெண்.. இரவில் சத்தம்.. போயிட்டியா கீதா? மனசாட்சி இல்லயா?
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 வயது குழந்தையை ஸ்கிப்பிங் கயிறால் சரமாரியாக பெற்ற தகப்பனே அடித்து தாக்கிய சம்பவம், ஒட்டுமொத்த பெற்றோர்களையும் கதிகலங்க செய்ததை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.. இதோ கர்நாடக மாநிலத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தாலும், சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் கிராம மக்களிடமிருந்து நீங்கவில்லை. என்ன நடந்தது தெரியுமா?
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது.. தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த தம்பதி கிங்ஸ்லி - சஜினி.

கிங்ஸ்லிக்கு 45 வயதாகிறது.. அந்த பகுதியில் மதபோதகராக செயல்பட்டு வருகிறார்..
இந்த தம்பதிக்கு 6 மற்றும் 3 வயதில் 2 மகன்களும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.. சம்பவத்தன்று தம்பதி இருவரும் ஊழியம் செய்ய வெளியே சென்றிருந்தனர்.
பிறகு வீட்டுக்கு திரும்பி வந்தபோது, குழந்தைகள் 2 பேரும் பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்களாம். இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த கிங்க்ஸ்லி, 2 குழந்தைகளையும் கயிற்றினால் சரமாரியாக அடித்தார்.. ஸ்கிப்பிங் கயிற்றினால் அடித்ததில், குழந்தைகளுக்கு உடம்பெல்லாம் ரத்த காயமும் ஏற்பட்டது..
சாத்தானே வெளியே போ
இது தொடர்பாக போலீசார் விசாரித்ததற்கு" எனக்கு அக்கம்பக்கம் வீடுகளில் குழந்தைகள் பழகுவது பிடிக்காது.. எனவே, ஊழியத்துக்கு செல்லும்போது குழந்தைகளை வீட்டில் பூட்டிவிட்டு செல்வேன்.. இப்போது பக்கத்து வீட்டில் குழந்தைகளுடன் விளையாடியதால், ஒருவேளை என்னுடைய குழந்தைகள் மீது சாத்தான் புகுந்து விட்டதாக நினைத்து பயந்துவிட்டேன்.. அந்த சாத்தானை விரட்டவே கயிறால் அடித்தேன் என்று வாக்குமூலத்தை கூறி போலீசாரையே அதிர்ச்சியடைந்த வைத்திருந்தார்..
இதோ கர்நாடகாவில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. சிவமுகா மாவட்டத்திலுள்ள ஜம்பரகட்டா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் 32 வயதான கீதா.,.. இவருக்கு சமீப காலமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் உடல் மெலிந்து கொண்டேவந்தது.. இரவிலும் சரியாக தூங்காமல் அடிக்கடி அலறி கத்தி சத்தம் போட்டு வந்துள்ளார்.
துடிதுடித்த கீதா
இதற்காக பல இடங்களில் சிகிச்சைகளை மேற்கொண்டார்.. ஆனாலும் உடல்நிலை சீராகவில்லை.. இதனால், கீதாவிற்கு பேய் பிடித்திருக்குமோ என்று குடும்பத்தினர் சந்தேகப்பட்டார்கள். உடனே அதே ஊரிலுள்ள பெண் சாமியாரிடம் கீதாவை அழைத்து சென்றிருக்கிறார்கள்..
உடனே அந்த பெண் மந்திரவாதியும், கீதாவுக்கு பேய் பிடித்துள்ளதால், முதலில் அதை விரட்டியடிக்க வேண்டும், இதற்காக இரவு பூஜை செய்ய வேண்டும் என்றார்..
தீ மூட்டிய பெண் மந்திரவாதி
இதற்கு குடும்பத்தாரும் ஒப்புக் கொண்டனர்.. நள்ளிரவில், தரையில் சில கட்டங்களை வரைந்து அதில் கீதாவை உட்கார வைத்து, நெருப்பு மூட்டிவிட்டார் பெண் மந்திரவாதி. பிறகு, ஏதோ மந்திரத்தை சொல்லிக் கொண்டே, திருநீறு எடுத்து கீதா மீது வீசினார்.. பிறகு திடீரென தடிமனான கம்பு எடுத்து, கீதாவை சரமாரியாக அடிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஏற்கனவே உடல் மெலிந்து, வலுவின்றி சோர்ந்து போயிருந்த கீதா, இந்த வலியை பொறுக்க முடியாமல் அலறி துடித்தார்.. ஆனாலும், பெண் மந்திரவாதி, கீதாவை தாக்குவதை நிறுத்தவில்லை.. இதனால் கீதா, அப்பயே மயங்கி விழுந்துவிட்டார்.. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக கீதாவை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள்..
புலம்பும் பொதுமக்கள்
அங்கு டாக்டர்கள் தீவிரமான சிகிச்சை தந்தும், கீதாவை காப்பாற்ற முடியவில்லை.. பரிதாபமாக இறந்துவிட்டார் கீதா.. இந்த விஷயம் அதற்குள், அந்த கிராமம் முழுவதும் தெரிந்து, கொந்தளிப்பை தந்தது.. ஆத்திரம் தாங்காத கிராம மக்களே, பெண் மந்திரவாதி குறித்து ஹொன்னுார் போலீசுக்கு தகவல் தந்தார்கள்..
உடனே போலீசாரும், பெண் மந்திரவாதியை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. கீதாவுக்கு ஏற்கனவே சரியான சிகிச்சையை அளித்து காப்பாற்றியிருக்கலாமே? அல்லது சாமியாரிடம் அழைத்து செல்லாமல் இருந்தாலாவது உயிருடன் இருந்திருப்பாரே? என்று ஆதங்கத்துடன் அம்மக்கள் கூறுகிறார்கள்.
என்று தீருமோ இக்கொடுமை
இந்தியா மட்டுமல்லாமல் மூடநம்பிக்கைகள் உலகளாவிய அளவில் பரவி கிடக்கிறது.. அனைத்து மதங்களிலுமே இந்த மூட நம்பிக்கைகள் பல உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கின்றன.. நினைத்ததையெல்லாம் நடத்தித் தந்துவிட்டு, அதன் பிறகு நரபலி போன்ற பயங்கரங்களையும் சிலர் அரங்கேற்றி விடுகிறார்கள். படித்தவர்களே, இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் ஈடுபடுவது அதைவிட வேதனையை நமக்கு தந்து கொண்டிருக்கிறது..!!












Click it and Unblock the Notifications