மிரட்டும் குரங்கு அம்மை.. ஹை அலர்ட்டில் பெங்களூர் ஏர்போர்ட்.. சர்வதேச பயணிகள் தீவிர கண்காணிப்பு
பெங்களூர்: டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பெங்களூர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மிரட்டி வரும் குரங்கு அம்மை (monkeyPox) நோய் தொற்று ஆசிய நாடுகளையும் மிரட்ட தொடங்கியுள்ளது. கடந்த வாரம் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருந்ததை மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்தது.

பெங்களூர் விமான நிலையம்: ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் கிளேட் 2 வகை பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. குரங்கு அம்மை தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏர்போர்ட்கள், துறைமுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், நாட்டின் முன்னணி விமான நிலையங்களில் ஒன்றான பெங்களூர் கெம்பே கவுடா விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் சுமார் 2 ஆயிரம் பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். கர்நாடக மாநிலத்திற்குள் குரங்கு அம்மை நோய் பரவல் ஊடுருவுவதை தடுக்கும் நோக்கில் தீவிர கண்காணிப்பு நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளின் உடல் வெப்ப நிலை கண்காணிக்கப்படுகிறது. தொற்று பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் இருந்தால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தவும் விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
வழிகாட்டு நெறிமுறைகள்: யாருக்கேனும் பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கொரோனா பொருந்தொற்று சமயத்தில் பின்பற்ற சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். மறுபரிசோதனை செய்யப்பட்டு வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தது உறுதி செய்யப்பட்ட பிறகே தனிமைப்படுத்தப்பட்ட நபர் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவக்குழு எப்போது விழிப்புடன் இருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நோய் அறிகுறிகள் என்ன?: குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்று பார்த்தால் காய்ச்சலுடன் உடல் முழுவதும் கொப்புளங்கள், கடுமையான தலைவலி, தசை வலி, முதுகு வலி ஆகியவை இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சிகிச்சை அளிக்காமல் இருந்தால் உயிருக்கே ஆபத்தாக நேரிடும். குரங்கு அம்மை நோய்க்கு என தனியாக தற்போதைக்கு சிகிச்சை இல்லை.
எனவே பாதிப்பை சீக்கிரமாக கண்டறிந்து சிகிச்சையளிப்பதே சிறந்தது எனவும் நோய் பரவலை கட்டுப்படுத்துவதுமே சிறந்த வழிமுறை எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபர்களை குரங்கு அம்மை எளிதாக தாக்கும். விமான நிலையங்களில் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டு இருப்பதால் அவற்றிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பாதிப்பு அறிகுறிகள் எதுவும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications