பெங்களூரில் "கொள்ளை"! ஒரே ரூட்டுக்கு மெட்ரோவுக்கும் ஆட்டோவுக்கும் இத்தனை கட்டண வேறுபாடா?
பெங்களூர்: பெங்களூரில் ஒரே ரூட்டுக்கான மெட்ரோ கட்டணம் ஆட்டோ கட்டணம் குறித்து குடியிருப்புவாசி ஒருவர் ஒப்பிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர், சென்னை உள்ளிட்ட மெட்ரோபாலிட்டன் சிட்டிகளில் எல்லாம் cost of living அதிகம் ஆகும். அதனால்தான் இங்கெல்லாம் சாமானிய மக்கள் வசிக்க தயங்குகிறார்கள்.

இங்கெல்லாம் வாடகை கொடுத்து மாளாது. இந்த வாடகைக்கு ஒரு சொந்த வீடே வாங்கிவிடலாம். அது போல் காய்கறி, பழங்கள், மளிகை சாமான்கள் எல்லாமே விலை அதிகம்தான். இதனால்தான் இந்த நகரங்களில் தங்கியிருந்து வேலை பார்ப்போர், மளிகை சாமான்களை சொந்த ஊர்களில் இருந்து வாங்கி ரயிலிலோ பஸ்ஸிலோ போட்டு கொண்டு வந்து விடுகிறார்கள்.
இது போல் போக்குவரத்து கட்டணமும் உயர்வுதான். பேருந்து கட்டணமும் ஆட்டோ கட்டணமும் அதிகமாகும். மக்கள் நெருக்கடி, தொழிற்சாலைகளின் வரவு, வேலைவாய்ப்புகளின் அடிப்படையில் செலவினங்கள் கூட குறைய ஆகும்.
அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த ஒருவர் ஆட்டோ கட்டணத்தையும் மெட்ரோ கட்டணத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதாவது அவர் மல்லேஸ்வரத்திலிருந்து யெலசெனஹள்ளி வரை மெட்ரோவில் 3 பேருடன் சென்றாராம். அதற்கு கட்டணம் 180 ரூபாயாம்.
அதே ரூட்டில் மூவருடன் ஆட்டோவில் சென்ற போது ரூ 210 வசூலிக்கப்பட்டதாக சொல்கிறார். மெட்ரோவில் ஏசி வசதி, குறைந்தபட்சம் 20 முதல் 25 நிமிடங்களில் நாம் இறங்கும் பகுதியை அடைந்துவிடலாம், பாதுகாப்பு உள்ளிட்ட நிறைய வசதிகள் இருக்கின்றன.
ஆனால் ஆட்டோவில் தாராளமாக 3 பேர் கூட உட்கார முடியாது. இதற்கு கிட்டதட்ட 30 ரூபாய் கட்டணம் அதிகம். இந்த பதிவு விவாதத்திற்குள்ளாகியுள்ளது. ஒவ்வொரு போக்குவரத்து வாகனங்களிலும் விலை மாறுதல்கள் குறித்தும் பயனாளிகள் பேசி வருகிறார்கள்.
கர்நாடகா அரசு ஆட்டோ சங்கங்களுடன் பேசி, விலையை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆட்டோக்கள், பெட்ரோல் டீசல் விலையை காரணம் காட்டி கட்டணத்தை அதிகரிக்கின்றன. எனவே அவர்களுக்கு எலக்ட்ரிக் ஆட்டோக்களை வாங்க உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

வேகம், பாதுகாப்பு, சவுகரியம் உள்ளிட்டவைகளுக்காக சிலர் மெட்ரோ பயணம் சிறந்தது என்கிறார்கள். மெட்ரோவில் ஏசி வசதி இருக்கிறது. தாராளமாக 3 பேர் பயணிக்கலாம். ஆனால் ஆட்டோவில் நீண்ட தூர பயணங்களுக்கு 3 பேர் உட்கார்ந்து கொண்டு போக வசதிப்படாது என்கிறார்கள்.
கடந்த பிப் 9ஆம் தேதி பெங்களூர் மெட்ரோ ரயில் கழகம் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியது. அது போல் பீக் ஹவர் என சொல்லப்படும் பிஸியான நேரங்களில் 5 சதவீதம் கூடுதல் கட்டணமும் மெட்ரோவில் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்வால் மெட்ரோவில் ஒரு நாளைக்கு பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை 6.3 லட்சம் குறைந்துவிட்டது. எதிர்பார்த்த வருவாயும் கிடைக்கவில்லை என்கிறார்கள் மெட்ரோ அதிகாரிகள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications