"உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
பெங்களூர்: கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் தனது நண்பரின் ஆசனவாயில் விளையாட்டுத்தனமாக காற்றை செலுத்தவே இதனால் குடல் வெடித்து அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நமது வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ இருக்கும் ஆபத்தான கருவிகளில் விளையாடக்கூடாது என்று பொதுவாக பெரியவர்கள் சொல்வார்கள்.

ஏனென்றால் சில நேரங்களில் விளையாட்டுத்தனமாக நாம் செய்யும் காரியம் கூட வினையாக மாறலாம். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்துள்ளது.
ஒருவர் உயிரிழப்பு: பெங்களூரில் பைக், கார் வாஷிங் சென்டரை நடத்தி வரும் நபர் ஒருவர் அவரது நண்பரின் ஆசனவாயில் உயர் அழுத்த காற்றை செலுத்தி இருக்கிறார். விளையாட்டுதனமாக அவர் செய்த இந்த காரியத்தால் அவரது நண்பர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது: பெங்களூர் புறநகர் பகுதியான தேவனஹள்ளி என்ற பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த நபர் யோகேஷ் என்றும் அவர் அங்கே உணவு டெலிவரி ஏஜெண்டாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. காற்று அதீத அழுதத்தில் உள்ளே உடலில் செலுத்தப்பட்டதாகவும் இதனால் உள் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குடல் வெடித்து சிதறியதே விபத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்..
உயிரிழந்த அந்த நபர் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் தனிசந்திராவில் வசித்து வந்துள்ளார். கடந்த மார்ச் 25ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முரளி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் தகவல்: இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "அவர்கள் விளையாட்டுதனமாக இதை செய்துள்ளனர். வண்டிகளில் அழுக்கை அகற்றப் பயன்படுத்தப்படும் சாதனத்திலிருந்து உயர் அழுத்தம் கொண்ட காற்றை அவரது முகத்தில் செலுத்தி இருக்கிறார். காற்று படுவேகமாக முகத்தில் அடிக்கவே யோகேஷ் முகத்தை மறைக்க மூடிக் கொண்டுள்ளார். இதனால் யோகேஷின் ஆசனவாயுவில் முரளி காற்றை செலுத்தி உள்ளார். இதனால் நிலைதடுமாறிய யோகேஷுக்கு கீழே விழுந்துள்ளார்" என்றார்.
உயர் அழுத்தம் கொண்ட காற்று அவரது உடலில் செலுத்தப்பட்டதே அவரது மரணத்திற்கு காரணமாக இருந்துள்ளது. யோகேஷின் சகோதரியின் திருமணம் விரைவில் நடக்க இருந்தது. இதற்காக அவர் தனது பைக்கை சர்வீஸுக்கு கொடுத்துள்ளார். அப்போது வண்டியை எடுக்க சென்ற போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இரண்டு நண்பர்கள் விளையாட்டுதனமாக செய்த காரியம் ஒருவர் உயிரையே பறித்துள்ளது. இதன் காரணமாகவே இதுபோன்ற கருவிகளில் விளையாடக்கூடாது.. இல்லையென்றால் அதுவே விணையாகி போகும் என்று எச்சரிக்கிறார்கள்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications