"அது" வேற பழகிடுச்சு.. சொல்ல சொல்ல அடங்காத மனைவி.. என்னாது வாரக்கணக்கிலா? பெங்களூரில் பெரிய ட்விஸ்ட்
பெங்களூர்: டிபன் கொடுக்காத காரணத்தினால், பெற்ற தாயை கொன்றதாக வாக்குமூலம் தந்த மகனின் வழக்கில், மிகப்பெரிய திருப்பம் பெங்களூரில் நடந்துள்ளது.
கர்நாடகாவில் கோலார் மாவட்டம், முல்பாகலை சேர்ந்தவர் நேத்ரா.. 40 வயதான இந்த பெண், பெங்களூரு கே.ஆர்.புரம் பீமய்யா லே - அவுட்டில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.. இதில், மகனுக்கு 17 வயதாகிறது.. அங்குள்ள கல்லூரி ஒன்றில், டிப்ளமோ படித்து வருகிறார்.. மகள் ஜியர்ஜியாவில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

கடந்த 30 வருடங்களாக கே.ஆர்.புரா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் நேத்ரா.. கடந்த வாரம் நேத்ராவுக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. இதனால் கோபமடைந்த மகன், சாப்பிடாமலேயே அன்றிரவு தூங்க போய்விட்டார்...
டைனிங் டேபிள்: பிறகு, மறுநாள் காலை 7:30 மணிக்கு காலேஜ் செல்வதற்காக கிளம்பி கொண்டிருந்தபோது, டைனிங் டேபிளில் தனக்கு டிபன் வைக்கப்படாமல் இருந்ததை கவனித்துள்ளார். அதனால், டிபன் கேட்பதற்காக தன்னுடைய அம்மாவின் ரூமுக்குள் சென்றால், அங்கே அவர் தூங்கி கொண்டிருந்தாராம். காலேஜ் போவது தெரிந்தும்கூட, டிபன்கூட செய்யாமல் இன்னமும் இருப்பது குறித்து, அம்மாவிடம் கேட்டுள்ளார்.
இது மீண்டும் வாய் தகராறாக வெடிக்கவும், ஆவேசமடைந்த மகன், வீட்டிற்குள்ளிருந்து இரும்பு கம்பியை எடுத்து வந்து, நேத்ராவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் நேத்ரா சுருண்டு விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன், நேராக கே.ஆர்.புரம் போலீசில் சரண் அடைந்துவிட்டார்.

வாக்குமூலம்: தன்னுடைய அம்மா தன்னை சரியாக கவனிக்கவில்லை, முறையாக சாப்பாடும் தருவதில்லை.. அந்த ஆத்திரத்தில் இரும்புகம்பியால் பலமாக தாக்கிவிட்டதாக வாக்குமூலம் தந்தார்.. ஆனால், இவரது வாக்குமூலத்தை போலீசார் ஏற்கவில்லை.. அவர் சொல்வதையும் முழுமையாக நம்பவுமில்லை.. அந்த வாக்குமூலத்தை வழக்கில் சேர்க்கவுமில்லை.. அதனால், சந்தேக மரணம் என்று மட்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தார்கள்..
முதலில், கொலைக்காக பயன்படுத்திய இரும்பு கம்பியை பறிமுதல் செய்து, அதனை ஆய்வு செய்தார்கள்.. அப்போதுதான், அந்த கம்பியில் பதிவாகியிருந்தது, நேத்ராவின் கணவரின் கைரேகைகள் என்பதை கண்டு அதிர்ந்து போனார்கள். பிறகு, கணவரை பிடித்து அவரிடம் விசாரணையை துவங்கினர்.. அவர் பெயர் சந்திரப்பா.. 45 வயதாகிறது.. பெங்களூரு ஒயிட்ஃபீல்டில் உள்ள டெக்பார்க்கில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கணவர்: ஆனால், நேத்ராவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.. நிறைய குடிப்பாராம்.. தண்ணி அடிக்கிற பழக்கத்தை கணவர் சந்திரப்பா, பலமுறை தட்டி கேட்டுள்ளார்.. தகராறு செய்துள்ளார்.. ஆனால், நேத்ரா அடங்கவில்லை. குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். திடீர் திடீர்னு வீட்டை விட்டு போய்விடுவாராம் நேத்ரா.

எங்கே போகிறார்? எங்கே தங்கியிருக்கிறார்? என்று கணவனுக்கும், மகனுக்கும் சொல்வதில்லையாம்.. வாரக்கணக்கில் வீட்டுக்கும் வருவதில்லையாம். இதனால், சந்திரப்பாவும், மகனும் ரொம்பவே நொந்து போனார்கள்.. மன உளைச்சலுக்கும் ஆளானார்கள்.
நேத்ரா கொலை: அதனால், மனைவி நேத்ராவை கொன்றே விடுவது என்று முடிவெடுத்தார் சந்திரப்பா. இந்த கொலை ஐடியாவை மகனிடம் சொல்லியுள்ளார். அதுமட்டுமல்ல, 17 வயது மைனர் மகன் கொலை செய்தால், சிறார் சட்டப்படி குறைந்தபட்ச தண்டனையே கிடைக்கும் என்பதால், போலீசிலும் வலிய சென்று சரணடைய சொன்னாராம் சந்திரப்பா.
மிக உயரிய படிப்பை படிக்க வைப்பாகவும், எதிர்காலத்துக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து தருவதாகவும் மகனுக்கு ஆசை காட்டி உள்ளார்.அதற்கு பிறகே மகன் இந்த கொலைக்கு சம்மதித்துள்ளார்..
குடிப்பழக்கம்: சம்பவத்தன்று காலையிலேயே வீட்டில் தனியே இருந்த நேத்ராவை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றுள்ளனர்.. அதற்கு பிறகு, போலீசில் சென்று, டிபன் செய்யாத காரணத்தினால்தான், அம்மாவை கொன்றதாக வலிய சென்று வாக்குமூலம் தந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. சந்திரப்பா இப்போது ஜெயிலில் உள்ளார்.. யாராக இருந்தாலும், இந்த குடிபோதை மொத்த குடும்பத்தையும் அழித்து விடுகிறதே??
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications