Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகிலேயே 3வது மோசமான நகரம் பெங்களூர்! இப்படியே போனா அவ்வளவுதான்! சைட் கேப்பில் மைசூருக்கு அடித்த லக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஒரு காலத்தில் நாடு முழுக்க இருக்கும் ஐடி ஊழியர்கள் பெங்களூருக்கு வரவே ஆசைப்பட்டனர். ஆனால், இன்று நகரின் மோசமான உட்கட்டமைப்பால் பெங்களூரில் இருந்து வெளியேறப் பலரும் விரும்புகிறார்கள். இதற்கிடையே பெங்களூரில் தற்போதைய நிலைமை குறித்துப் பதிவிட்டுள்ள முதலீட்டு வங்கியாளரான சர்தக் அஹுஜா, அது உலகின் 3வது மிக மோசமான நகரமாக இருப்பதாகச் சாடியுள்ளார்.

இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று கொண்டாடப்பட்ட பெங்களூர் தான் இந்தியாவின் தொழில்நுட்பத் துறையின் மையமாக இருந்து வருகிறது. துடிப்பான ஸ்டார்ட்அப் கலாச்சாரம், சர்வதேச ஐடி நிறுவனங்கள் என்று இளம் தலைமுறையினர் மிகவும் விரும்பும் ஒரு நகரமாக பெங்களூர் இருந்தது. பல ஆண்டுகளாக, இளம் தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் பெங்களூருவுக்குப் படையெடுத்தனர்.

Bangalore Ranked Third Worst City Globally Why People Are Leaving India s Silicon Valley Unveiled

பெங்களூர் சிக்கல்

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலைமை ரொம்பவே மோசமாக மாறி வருகிறது. நகரத்தின் வளர்ச்சியைத் தாண்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல், மோசமான சாலைகள், அதிகரித்து வரும் காற்று மாசு, குடிநீர் பற்றாக்குறை ஆகியவை பேசுபொருளாக மாறியது.. வளர்ச்சி மற்றும் புதுமைகளில் சிறந்து விளங்கினாலும், போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் என்பதே முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இதனால் இவ்வளவு சிரமத்துடன் பெங்களூரில் இருக்க வேண்டுமா எனப் பல ஐடி ஊழியர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு பக்கம் இன்ஃபோசிஸ் முதல் ஃபிளிப்கார்ட் வரை முக்கிய நிறுவனங்கள் பெங்களூரில் இருக்கிறது. நாட்டிலேயே அதிகக் கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதேநேரம் மறுபுறம் மக்களின் அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்யும் உட்கட்டமைப்பு பெங்களூரில் இல்லை. இதுவே பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது.

3வது மோசமான நகரம்

இதற்கிடையே முதலீட்டு வங்கியாளரான சர்தக் அஹுஜா பெங்களூர் சூழல் தொடர்பாகப் பதிவிட்டிருந்த ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது தொடர்பாக அவர், "பெங்களூர் இப்போது போக்குவரத்து நெரிசலுக்கு உலகின் மூன்றாவது மோசமான நகரமாக இருக்கிறது. மக்கள் சராசரியாக ஒரு வருடத்தில் 134 மணிநேரத்தை நெரிசலில் செலவிடுகிறார்கள்" என்கிறார். டாம்டாம் என்ற நிறுவனம் வெளியிட்ட 2024ம் ஆண்டுக்கான சர்வதேச டிராபிக் குறித்த ஆய்வில், சர்வதேச அளவில் அதிக டிராபிர் நெரிசலை கொண்ட நகரங்கள் பட்டியலில் பெங்களூர் 3வது இடத்தில் இருக்கிறது.

எல்லாமே சிக்கல்

வெறும் போக்குவரத்து நெரிசல் மட்டுமல்ல. அதிகரித்து வரும் காற்று மாசு, கட்டுப்படியாகாத வீட்டு வாடகை மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஆகியவை மக்கள் வாழ்க்கையை மேலும் கடினமாக்கி வருகின்றன. இதனால் மக்கள் வேறு சிறிய நகரங்களுக்குச் செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். அப்படி பெங்களூரை விட்டு வெளியேற விரும்புவோருக்கு முதல் சாய்ஸாக மைசூர் இருக்கிறதாம்.

அஹுஜா மேலும் கூறுகையில், "மைசூரில் நீங்கள் 15 நிமிடங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். பெங்களூரை விட மைசூரில் வாழ்க்கைச் செலவு 10-20% குறைவாக உள்ளது. மைசூரில் கடந்த ஆண்டில் சொத்து விலைகள் 50%க்கும் மேல் அதிகரித்திருந்தாலும், இன்னுமே அவை பெங்களூருவை விட 30-50% மலிவாகவே உள்ளன. மேலும், வாடகை மூலம் கிடைக்கும் வருவாயும் கூட பெங்களூரில் அதிகமாக இருக்கிறது.

அடுத்து வரும் ஆண்டுகள்

அதேநேரம் இந்தப் போக்கு பெங்களூருவுக்கு மட்டுமானது இல்லை. மும்பை, டெல்லி, குர்கான், புனே உள்ளிட்ட நமது அனைத்து மெட்ரோ நகரங்களிலும் இதே பிரச்சனை தான்.. கடந்த பத்தாண்டுகளில் மெட்ரோ நகரங்களில் ரியல் எஸ்டேட் உச்சக்கட்ட வளர்ச்சியை அடைந்தது. ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டாம் கட்ட நகரங்களிலேயே ரியல் எஸ்டேட் வளர்ச்சி இருக்கும் என நினைக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+