மிஸ்ஸான அழகான மாமியார்.. விழிக்கும் மணமகள்.. 13 வருடம் வாழ்ந்த கணவனையே தூக்கி எறிந்த பெங்களூர் பெண்
பெங்களூர்: முறைதவறிய உறவுகளால் பல குடும்பங்கள் சிதைந்து வருகின்றன.. உறவு சிக்கல்களால், தம்பதிகளுக்குள் பிரிவுகள், சலசலப்புகள் ஏற்பட்டு, குடும்பங்களும் பிரிந்து, அவர்களின் குழந்தைகளும் நடுத்தெருவுக்கு வந்துவிடும் கொடுமை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாமியார் செய்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் அடங்காத நிலையில், அதற்குள் பெங்களூர் பெண் செய்த காரியம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
உத்திரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள மத்ராக் பகுதியைச் சேர்ந்த ஷிவானி என்பவருக்கும், ராகுல், 20, என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரும்16ம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. திருமண பத்திரிகைகளும் விநியோகிக்கப்பட்டுவிட்டன.. திருமணத்துக்கான நகை, பாத்திரங்களும் வாங்கப்பட்டுவிட்டன.

திருமண தங்க நகைகள்
இந்நிலையில், மணமகள் ஷிவானியின் 40 வயது அம்மா அனிதா, 20 வயது மணமகனுடன் மாயமாகிவிட்டார்.. திருமணத்துக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 3.5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் அனிதா அள்ளிச் சென்றுவிட்டார். மகளைவிட, அனிதா அழகாக இருப்பாராம்.
பெங்களூரில் தொழிலதிபராக இருக்கிறார் அனிதாவின் கணவர் ஜிதேந்திர குமார். தன்னுடைய மனைவி ஓடிவிட்டது குறித்து சொல்லும்போது, ''நிச்சயதார்த்தம் நடந்ததிலிருந்து வருங்கால மாப்பிள்ளையுடன் அனிதா மணிக்கணக்கில் பேசி வந்தார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மகளுடன் மாப்பிள்ளை பேசாமல் இருந்ததும் எனக்கு கவலையை ஏற்படுத்தியது. திருமணம் நல்லபடியாக முடியவேண்டும் என்பதால் அமைதியாக இருந்தேன். ஆனால், அதற்குள் இப்படியாகிவிட்டது'' என்றார்.
பெங்களூரு இளம்பெண்
இப்போது இரு குடும்பத்தினரும் மாயமான ஜோடியை தேடி கொண்டிருக்கிறார்கள்.. இந்நிலையில், பெங்களூரில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.. பெங்களூரு ரூரல், ஜக்கசந்திராவில் வசிப்பவர் ரமேஷ்.. இவருக்கு 40 வயதாகிறது.. மனைவி நேத்ராவதிக்கு 35 வயதாகிறது.. இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகின்றன.. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.
10 நாட்களுக்கு முன்பு நேத்ராவதிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சந்தோஷ் என்ற நபர் அறிமுகமானார்... உடனே இது காதலாக மாறியது. அடுத்து கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.. அதாவது, அறிமுகம், நட்பு, காதல், கல்யாணம் என அனைத்துமே ஒரே வாரத்தில் நடந்து முடிந்துவிட்டது..
ஓடிப்போன நேத்ராவதி
2 நாட்களுக்கு முன்பு கணவரையும், மகனையும் தவிக்கவிட்டு நேத்ராவதி வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார்.. கோவில் ஒன்றில் சந்தோஷை கல்யாணமும் செய்து கொண்டார். இந்த கல்யாண வீடியோவை சோஷியல் மீடியாவிலும் வெளியிட்டார்..
இதைப்பார்த்து கணவர் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனே நேத்ராவதி, நெலமங்களா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிச்சென்றார்.. "கணவருடன் எனக்கு வாழ விருப்பம் இல்லை, அதனால் சந்தோஷை திருமணம் செய்து கொண்டேன்.. கணவர் வீட்டில் உள்ள என்னுடைய துணிமணிகள், மற்ற பொருட்கள் வேண்டும்... ஆனால், அந்த குடும்பத்தினர் என்மீது தாக்குதல் நடத்தலாம். எனக்கு அங்கு செல்ல பயமாக இருக்கிறது.. போலீஸ் பாதுகாப்பு வேண்டும்' என்று கேட்டார்.
13 வருட திருமண பந்தம்
பிறகு போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் ரமேஷின் வீட்டுக்கு வந்தார் நேத்ராவதி.. ஆனால், கணவர் ரமேஷ் எதுவுமே பேசவில்லை.. அதற்கு மாறாக, அக்கம் பக்கத்தினர், குடும்பத்திலிருந்தவர்கள் நேத்ராவதியை திட்டி தீர்த்தார்கள்..
"ஒரு வாரத்துக்கு முன்பு அறிமுகமான நபருக்காக, 13 வருடங்கள் வாழ்ந்த கணவரை தூக்கி எறிவதா? என்று அக்கம் பக்கத்தினர் கொந்தளித்தார்கள்.. ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத நேத்ராவதி, வீட்டிலிருந்த தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.












Click it and Unblock the Notifications