தண்ணீர் கேட்டு கிச்சனில் என்ட்ரி.. பெண் என்ஜினீயருக்கு பாலியல் தொல்லை.. உணவு டெலிவரிபாயின் வக்கிரம்
பெங்களூர்: பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் உணவு டெலிவரிக்கு சென்ற இளைஞர் தனியாக இருந்த பெண் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் குடிக்க தண்ணீர் கேட்டதோடு, அவரை பின்தொடர்ந்து கிச்சனுக்குள் சென்று பாலியல் தொல்லை கொடுத்து தோசை கல்லில் அடிவாங்கி ஓடிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர் ஏஇசிஎஸ் லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 30 வயது பெண். இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 17 ம் தேதி மாலையில் பெண் என்ஜினீயர் செல்போன் செயலி மூலம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தார்.

பெண் என்ஜினீயர் தான் வசிக்கும் ஏஇசிஎஸ் லே-அவுட் அருகேயுள்ள பிரபல ஹோட்டலில் இருந்து சில உணவுகளை அவர் ஆன்லைன் செயலி மூலம் ஆர்டர் செய்தார். மாலை 6.45 மணிக்கு பெண் என்ஜினீயரிடம் டெலிவரி பாய் ஒருவர் வந்து உணவை வழங்கினார்.
அப்போது அவர் மிகவும் களைப்புடன் காணப்பட்டார். இதையடுத்து அந்த பெண் என்ஜினீயர், ‛‛தண்ணீர் ஏதாவது வேண்டுமா?'' என கேட்டுள்ளார். அதற்கு அவர் தண்ணீர் கேட்டுள்ளார். இதையடுத்து பெண் என்ஜினீயர் தனது வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். தண்ணீரை குடித்த டெலிவரி பாய் அங்கிருந்து புறப்பட்டார்.
இதையடுத்து பெண் என்ஜினீயர் வீட்டு கதவை மூடிவிட்டு உள்ளே சென்றார். ஆனால் அடுத்த சில நொடிகளில் வீட்டில் ‛காலிங்பெல்' சத்தம் கேட்டது. பெண் என்ஜினீயர் கதவை திறந்து பார்த்தார். அப்போது வீட்டு வாசலில் அதே டெலிவரிபாய் நின்றார். மேலும் அவர், வீட்டில் உள்ள கழிவறையை பயன்படுத்தி கொள்ளலாமா? என கேட்டார். பெண் என்ஜினீயரும் அனுமதித்தார். கழிவறையை பயன்படுத்திவிட்டு வெளியே வந்த டெலிவரி பாய் மீண்டும் குடிக்க தண்ணீர் கேட்டார்.
இதையடுத்து பெண் என்ஜினீயர் வீட்டு வாசலில் காத்திருக்கும்படி கூறிவிட்டு தண்ணீர் எடுக்க கிச்சனுக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற டெலிவரி பாய் திடீரென்று அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன பெண் என்ஜினீயர் அவரை தள்ளிவிட்டு தப்ப முயன்றார். ஆனால் டெலிவரி பாயின் பிடியில் இருந்து அவரால் விலக முடியவில்லை.இதனால் பெண் என்ஜினீயர் கூச்சலிட்டார். மேலும் அவர் கிச்சனில் இருந்த தோசைக்கல்லை எடுத்த டெலிவரி பாயை தாக்கினார்.
இதில் வலி தாங்க முடியாமல் அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பெண் என்ஜினீயர் பின்னால் விரட்டி சென்றாலும் கூட அவரால் பிடிக்க முடியவில்லை. இதுபற்றி உடனடியாக அவர் 112 என்ற எண் மூலம் ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் எச்ஏஎல் போலீசில் புகாரளிக்க கூறினர். அதன்பேரில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த டெலிவரி பாயை தேடிவருகின்றனர்.
-
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications