"பிளாக்மெயில்.." திருமணமான பெண்ணுடன் உறவு.. கல்யாணமான மறுநாள் நடுரோட்டில் இளைஞர் செய்த பகீர் காரியம்

பெங்களூர் டிராபிக்கில் நடந்த காரியம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

: கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிராபிக்கில் 10 நிமிடம் வாகனம் நின்ற நிலையில், அப்போது புது மாப்பிள்ளை செய்த காரியம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்திய நகரங்களில் டிராபிக் நாளுக்கு நாள் மிகப் பெரிய தலைவலியாக மாறி வருவது அனைவருக்கும் தெரியும். கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிராபிக் பிரச்சினை குறித்து தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை.

ஒரு இடத்தில் இருந்து அருக இருக்கும் மற்றொரு இடத்திற்குச் செல்லவே அதிக நேரம் ஆகிவிடும். இதனிடையே டிராபிக்கை பயன்படுத்தி புதிதாகக் கல்யாணம் செய்து கொண்ட கணவர் செய்த காரியம் பகீர் தருவதாக இருக்கிறது.

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரில் உள்ள மகாதேவ்புராவின் டெக் காரிடாரில் புதுமண தம்பதி காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு மிகச் சமீபத்தில்... கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. இருவரும் மகாதேவ்புராவின் டெக் காரிடாரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனம் டிராபிக்கில் சிக்கியுள்ளது. வாகனம் டிராபிக்கில் சிக்கிய நிலையில், திடீரென கதவைத் திறந்த மணமகன் தனது மனைவியை விட்டு ஓடிவிட்டாராம். இது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஓடிய மாப்பிள்ளை

ஓடிய மாப்பிள்ளை

இந்தச் சம்பவம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி நடந்துள்ளது. எப்படியும் தனது கணவர் திரும்ப வந்துவிடுவார் என்றே நம்பி அந்த பெண் இருந்துள்ளார். இருப்பினும், அவர் திரும்பாத நிலையில், வேறு வழியில்லாமல் கடந்த மார்ச் 5ஆம் தேதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாகவே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புது மனைவியை நடுரோட்டில் திடீரென தனியாகத் தவிக்கவிட்டுச் சென்ற அந்த இளைஞர், சிக்கபல்லாபூர் மாவட்டம் சிந்தாமணியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

அந்தரங்கம்

அந்தரங்கம்

அவர் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் முன்பு, மற்றொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்போது, அவர்கள் தனிமையில் நெருக்கமாக இருக்கும் போது, அந்தரங்க தருணங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இப்போது அந்த இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பொதுவெளியில் வெளியிடுவேன் என்று அவரது முன்னாள் காதலி மிரட்டியுள்ளார்.

பிளாக்மெயில்

பிளாக்மெயில்

இப்படி தன்னை முன்னாள் காதலி பிளாக்மெயில் செய்வது குறித்தும், அந்த இளைஞர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதற்குக் கவலைப்பட வேண்டாம்.. பிரச்சினையைச் சரி செய்யலாம். கடைசி வரை நான் இருக்கிறேன் என்றே அந்த பெண் நம்பிக்கை தரும் வகையில் பேசியுள்ளார். இருப்பினும், திருமணமான மறுநாளே அந்த பெண்ணை நடுரோட்டில் விட்டுவிட்டு இவர் ஓடிவிட்டார். வாகனம் வெறும் 10 நிமிடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நிலையில், திடீரென அந்த இளைஞர் கார் கதவைத் திறந்து ஓடிவிட்டார்.

பயமாக இருக்கிறது

பயமாக இருக்கிறது

அந்த பெண் அவரை பிடிக்க முயன்றுள்ளார்.. பின்னாலேயே சிறிது நேரம் ஓடியுள்ளார். இருந்த போதிலும், அதில் பலனில்லை. வேகமாக அந்த இளைஞர் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து அந்த பெண் கூறுகையில், "திருமணத்திற்கு முன்பே இந்த விவகாரம் குறித்துச் சொன்னார்கள்... இனிமேல் அந்த பெண்ணை பார்க்கச் செல்ல மாட்டேன் என்று அவர் உறுதியாகச் சொன்னார். அதன் காரணமாகவே அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டேன்.. பிளாக்மெயிலுக்கு பயந்து அவர் ஓடிவிட்டார். அவருக்குத் தற்கொலை எண்ணங்களும் இருந்தது. இதனால் தான் பயமாக இருக்கிறது. அவர் பத்திரமாக இருக்கிறார் என்று நம்புகிறேன்.. அவர் விரைவில் திரும்புவார் என்று காத்திருக்கிறேன்" என்றார்.

திருமணம் மீறிய உறவு

திருமணம் மீறிய உறவு

அந்த இளைஞருக்குத் திருமணத்திற்கு முன்பு கோவாவில் திருமணமான பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்த உறவை அவரது குடும்பத்தினர் அறிந்ததும் கண்டித்துள்ளனர். இதனால் அந்த பெண்ணை மீண்டும் சந்திக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் குடும்பத்தினருக்குத் தெரியாமல் தொடர்ந்து சந்தித்தே வந்துள்ளார். இதன் காரணமாகவே அவரது திருமணத்தை வேறு இடத்தில் நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இப்போது திருமணமான மறுநாளே இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+