தெருநாய் தொல்லை இனி இல்லை.. பெங்களூருக்கு ஆறுதல் நியூஸ் சொன்ன அமைச்சர்
பெங்களூர்: பெங்களூரை தெருநாய்கள் இல்லாத மாநிலமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கர்நாடக மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு சவுகான் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் நாய் தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. வெறிநாய்கடி தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்தன. அதிலும் குறிப்பாக இரவில் நடந்து போவோர், பைக்கில் போவோரை நாய்கள் விரட்டி கடிக்கின்றன. இதனையடுத்து பெங்களூரை தெருநாய்கள் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு சவுகான், பெங்களூருவை தெருநாய்கள் இல்லாத மாநிலமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தெரு நாய்களைப் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தெருநாய்களை பிடித்து தடுப்பூசிகளை செலுத்தி, காப்பகத்தின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அங்கு தெருநாய்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இனி தெருநாய்களால் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது எனவும் சவுகான் உறுதியுடன் கூறினார். '
தெருநாய்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த கருத்தடை தடுப்பூசி போடுவது தொடர்பாக பெருநகர் பெங்களூர் மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சவுகான் ஆலோசனையும் மேற்கொண்டார். கால்நடைத்துறை அதிகாரிகள் அளித்த அனைத்து விவரங்களின் அடிப்படையில் பெங்களூருவை தெரு நாய்கள் இல்லாத நகரமாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் சவுகான் தெரிவித்தார்.
பெங்களூருவில் பி.பி.எம்.பி ஆண்டுதோறும் 45 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்தபோதிலும், நகரத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications