துண்டு துண்டா சிதறிய 10 உடல்கள்.. ஒரே காரில் எப்படி12 பேர்? பஸ் + கார் மோதி பயங்கர விபத்து.. மைசூரில்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மைசூர்-கொள்ளேகால் சாலையில் பஸ்ஸூம், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. மேலும் உயிரிழப்புகள் அதிகமாகலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மைசூரில் இருந்து கொள்ளேகால் பகுதிக்கு, ஒரு தனியார் பஸ் சென்றுக்கொண்டிருந்தது.. அப்போது, கொள்ளேகால் என்ற பகுதியில் இருந்து, யுனோவா கார் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது..

நொறுங்கிய கார்:
அப்போது பஸ்ஸூம், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. யுனோவா காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து, மரண ஓலத்தை கேட்டு, அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர்.. அதற்குள் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், செல்லும் வழியிலேயே மேலும் 2 பேர் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனால், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது..
படுகாயம்:
மேலும் பலர், படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... மற்றொருபுறம், இந்த விபத்து குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.. இனோவா கார் அதிவேகமாக இயக்கப்பட்டதே இந்த கோர விபத்துக்கு காரணம் என்று முதல்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது..
இறந்தவர்களின் உடல்கள் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்தில் இறந்தவர்களில் சிலர் பெல்லாரி சங்கனக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். காரில் வந்தவர்கள், பெல்லாரி ஊரகத் தொகுதியில் உள்ள சங்கனக்கல்லில் இருந்து பெங்களூருவுக்கு டூர் வந்திருக்கிறார்கள்.. பிறகு, பெங்களூருவிலிருந்து, வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு, காம்ராஜ் நகர் மாவட்டத்தை சுற்றிப்பார்த்து விட்டு, மறுபடியும் பெங்களூருவுக்கு திரும்பி கொண்டிருந்திருக்கிறார்கள்..
எப்படி சாத்தியம்? :
அந்த நேரத்தில்தான், இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்கிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவர் நிலைமை சீரியஸாக இருக்கிறதாம்.. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், ஒரே காரில் எப்படி 13 பேர் செல்ல முடியும்? என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியமான கேள்வியாக எழுந்துள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications