"கருப்பா இருக்கியே".. மேக்கப் போட்டபோது திடீர்னு வீங்கிய முகம்.. அதிர்ந்த மாப்பிள்ளை.. கலங்கிய பெண்
திருமணம் நடக்கவிருந்த நிலையில், திடீரென அதை தடுத்து நிறுத்திவிட்டாராம் கர்நாடக இளைஞர் ஒருவர்
பெங்களூரு: திருமணத்துக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருந்த நிலையில், இளைஞர் தன் திருமணத்தை திடீரென நிறுத்திவிட்டார். இதையடுத்து, பெண் வீட்டார் செய்வதறியாது திகைத்து நின்ற சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு கடைசி நிமிடங்களில் நின்றுபோய்விடுகின்றன.. மாப்பிள்ளை 2-ம் வாய்ப்பாட்டை சொல்லாதது, உருது வார்த்தைகளை சொல்லாதது, உள்ளிட்ட வினோத காரணங்களுக்காகவும் மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன.
பெரும்பாலும், வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்.. அல்லது சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. இதனாலும் திருமணங்கள் நின்றுவிடுவது உண்டு..

ஸ்வீட் எடு கொண்டாடு
3 மாதங்களுக்கு முன்பு, வடமாநிலத்தில் ஒரு திருமண வரவேற்பில், மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை ஸ்வீட் எடுத்து ஊட்டிவிட போனார்.. ஆனால், அந்த பெண் தனக்கு ஸ்வீட் வேண்டாம் என்றார்.. மாப்பிள்ளையோ, ஆசை ஆசையாக ஸ்வீட்டை அந்த பெண்ணின் வாய்க்குள் திணித்து ஊட்டினார்.. இதனால் ஆத்திரமடைந்த கல்யாண பெண், வலுக்கட்டாயமாக எப்படி தனக்கு ஸ்வீட் ஊட்டலாம் என்று கேட்டு, மணமகனை பளார் என்று ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.. உடனே மாப்பிள்ளைக்கு கோபம் சுர்ரென்று ஏறி, அவரும் பதிலுக்கு மணமகளிடம் பாய்ந்தார்.. மணமகள் ஒரு அறை விட்டால், மாப்பிள்ளை பதிலுக்கு பளார் பளார் என 4 அறை அறைந்தார்..

லாஸ்ட் மினிட்
மணப்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்கினார்.. பதிலுக்கு மணப்பெண்ணும் மாப்பிள்ளையின் சட்டையை பிடித்து இழுத்து அடித்தார்.. இவ்வளவும் மணமேடையில், எல்லார் முன்பும் அரங்கேறி, கடைசியில் அந்த கல்யாணமே நின்றுவிட்டது. இப்படி திருமணம் நின்றுவிடுவதற்கு பல காரணங்கள் ஏற்பட்டுவிடும் என்றாலும், தற்போது ஒரு துயர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.. அங்குள்ள ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. அவருக்கு ஒரு இளைஞருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.. கடந்த வாரம் அவர்கள் 2 பேருக்குமே நிச்சயதார்த்தம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

பியூட்டி பார்லர்
அப்போது, திருமணம் 2-ந்தேதி அதாவது நேற்று முன்தினம்தான் நிச்சயிக்கப்பட்டிருந்தது.. அரிசிகெரேயில் திருமணத்துக்கான ஏற்பாடுகளும் ஏற்பாடாகி கொண்டிருந்தன.. 2ம்தேதி திருமணம் என்பதால், அதற்கு 2 நாட்களுக்கு முன்பு, மேக்கப் போட முடிவு செய்தார் மணப்பெண்.. இதற்காக அரிசிகெரேயில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றார்.. அந்த பியூட்டி பார்லர் ஓனர் பெயர் கங்கா என்பதாகும்.. மணப்பெண்ணுக்கு, கங்கா மேக்கப் போட்டார்.. பிறகு, திருமணத்துக்கு 2 நாட்கள் இருப்பதால், 'மேக்கப்' கலைந்து விட கூடாது என்பதற்காக, வெந்நீரில் ஆவி பிடித்ததாக தெரிகிறது.

கருமை மேக்கப்
வெந்நீரில் ஆவி பிடித்ததால் மணப்பெண்ணின் முகம் திடீரென கருமை நிறமாக மாறியது... ஆவி முகத்தில் பட்டதுமே, அவருக்கு எரிச்சல் வந்துவிட்டது.. இதனால் முகம் வெந்து கொப்புளங்கள் வந்துவிட்டன.. அடுத்து, கண்களும், கன்னமும் சிவப்பு நிறத்தில் வீங்கியது... இவை எல்லாமே அடுத்தடுத்த கொஞ்ச நேரத்தில் நடந்துமுடிந்துவிட்டது.. இதனால் அதிர்ச்சி அடைந்த மணப் பெண்ணும், அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர்.. இதனிடையே, மேக்கப் போட்ட மணப்பெண்ணின் முகம் கருப்பு நிறத்தில் மாறிவிட்ட விஷயம், மாப்பிள்ளை வீட்டுக்கு எட்டியது..

மாறிய கலர்
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே, கல்யாணம் வேண்டாம் என்ற சொல்லிவிட்டாராம் மாப்பிள்ளை. இதைக்கேட்டதுமே மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மேலும் அதிர்ந்து போனார்கள். இதனால் நேற்று முன்தினம் நடக்க இருந்த திருமணமும் நின்றுவிட்டது.. இதையடுத்து, ஆத்திரமடைந்த மணமகளின் குடும்பத்தினர் பியூட்டி பார்லர் ஓனர் கங்கா மீது அரிசிகெரே போலீசில் புகார் தந்தனர்.. அதன்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் ஒரு கல்யாணமே நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டீம் க்ரீம்
அதாவது, திருமணத்திற்கு வித்தியாசமாக மேக்கப் போட வேண்டும் என்று மணமகள் நினைத்தாராம்.. தன்னுடைய விருப்பத்தையும் பியூட்டி பார்லர் ஓனர் கங்காவிடம் சொல்லி, புதிய யுக்தியை பயன்படுத்துமாறும் கேட்டிருக்கிறார்.. உடனே கங்கா, தான் புதிய வகையிலான மேக்கப் முறையை கற்றுக்கொண்டுள்ளதாகவும், அதை இப்போது முயற்சி செய்கிறேன் என்றும் சொல்லி உள்ளார். இதை நம்பித்தான் தனக்கு புதிய வகை மேக்கப் போட போட மணப்பெண் அனுமதித்துள்ளார்... முதலில் மணப்பெண் முகத்தில் புதிய வகை கிரீமை வைத்து தேய்த்துள்ளார்.. அதற்கு பிறகு, முகத்தை மூடி சுடு தண்ணீராலான நீராவியில் 'ஸ்டீம்' செய்துள்ளனர்...

கொப்புளங்கள்
ஸ்டீம் செய்த பிறகுதான், மணப்பெண்ணின் முகத்தில் தீக்காயங்களுக்கான தழும்புகள் ஏற்பட்டுள்ளது.. உடனே முகம் வீங்கி விட்டது.. கருப்பு கலராகவும் மாறியுள்ளது... இதையடுத்து, மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.. ஆனாலும் வீக்கம் இன்னும் குறையவில்லை.. சிவப்பு நிற தழும்புகளும் ஏற்பட்டுள்ளன.. கொப்புளங்களும் அதிக அளவில் பரவிவிட்டன.. இதனால், இதுகுறித்து அந்த மணப்பெண் குடும்பத்தினரிடம் எப்படிக் கூறுவது என்பது தெரியாமல் தவித்துள்ளனர்.. எனினும் சிகிச்சையில் பெற வேண்டி உள்ளதால் வேறு வழியின்றி சொல்லி உள்ளனர்.. முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டு மணப்பெண்ணின் முகமே மாறிவிட்டதால், கல்யாணம் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் மாப்பிள்ளை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications