"ஏய், பொட்டு எங்கே".. கடைக்கார பெண்ணை பார்த்ததுமே.. பாஜக எம்பிக்கு வந்த டென்ஷன்.. எகிறி வந்த கதர்கள்

பாஜக எம்பி பேசிய சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கடையில் நின்றுகொண்டிருந்த பெண்ணை பார்த்ததுமே டென்ஷன் ஆகி சீறியிருந்தார் பாஜக எம்பி.. ஆவேசமாக அவரை திட்டியும் இருந்த நிலையில், அந்த பாஜக எம்பிக்கு காங்கிரஸ் கட்சி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது. என்ன நடந்தது?

மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவிலும் அந்த விழாக்கள் அரங்கேறின.. மகளிர்களுக்கென்று சிறப்பு நிகழ்ச்சிகள், வாழ்த்துகள் என பலதரப்பிலும் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தன.

அதிலும் நம் நாட்டில் சில மாநிலங்களில், அலுவலகங்களில் வேலைபார்க்கும் பெண்களுக்கு விடுமுறை தரப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.. மேலும் பஸ்களில், இலவச பயணம் என்று ஸ்பெஷல் சலுகையும் இன்றைய தினத்தில் வழங்கப்பட்டன.

 ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக இவ்வளவு கொண்டாட்டங்கள் நடந்த நிலையில், கர்நாடகத்தில் ஒரு சம்பவம் நடந்து அதிர வைத்துள்ளது.. இதற்கெல்லாம் காரணம்,ஒரு பாஜக எம்.பி. ஆவார்.. அவர் பெயர் முனிஸ்வாமி... மகளிர் தினத்தை முன்னிட்டு, கோலாரில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை கோலார் எம்பியான பாஜகவை சேர்ந்த முனிஸ்வாமி தொடங்கி வைக்க வந்திருந்தார்.. நிகழ்ச்சியை துவக்கி வைத்துவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களுடன் கண்காட்சியை பார்வையிட்டார்.. அங்கு வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கடைகள் ஒவ்வொன்றையும் பார்த்து கொண்டே நடந்து சென்றார்.. அப்போது ஒரு கடையில், பெண் ஒருவர் விற்பனைக்காக நின்று கொண்டிருந்தார்..

 பொட்டு எங்கே

பொட்டு எங்கே

அவர் தன்னுடைய நெற்றியில் பொட்டு வைக்கவில்லை போலும்.. இதை முனிஸ்வாமி கவனித்துவிட்டார்.. அந்த பெண்ணின் நெற்றியில் பொட்டு இல்லாததை பார்த்ததும் கோபம் வந்துவிட்டது.. அதனால், அந்த பெண்ணை பார்த்து, ‛ஏன் பொட்டு வைக்கவில்லை? இங்கு கடை வைக்க யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது? யாரோ பணம் கொடுப்பதால், நீங்கள் நெற்றியில் பொட்டு வைக்க மாட்டீங்களா? முதலில் பொட்டு வையுங்கள்.. ஏய், அந்த பெண்ணுக்கு யாராச்சும் ஒரு பொட்டை எடுத்து கொடுங்க.. உங்கள் கணவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் இல்லையா? உங்களுக்கு அந்த பொது அறிவு கூட இல்லையா!" என்று அந்த பெண்ணிடம் கோபமாக கேட்டார்.

 மலங்க மலங்க

மலங்க மலங்க

இதனால் கடையில் நின்றுகொண்டிருந்த அந்த பெண் மலங்க மலங்க விழித்தார். முனிஸ்வாமி எம்பி கடைக்கார பெண்ணிடம், பொட்டு வைக்கும்படி ஆக்ரோஷமாக சொன்ன வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி விட்டது.. இது சர்ச்சையையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. முனிஸ்வாமி எம்பியின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. அதிலும் காங்கிரஸ் முதல்நபராக வந்துவிட்டது.. இதுபோன்ற சம்பவங்கள் பாஜகவின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக காங்கிரஸ் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது..

 நவீன காவலர்கள்

நவீன காவலர்கள்

இதற்கு தமிழக எம்பியான கார்த்தி சிதம்பரமும் தனது கண்டணங்களை பதிவு செய்துள்ளார்.. "பாஜக இந்தியாவை 'இந்துத்வா ஈரானாக" மாற்றி வருகிறது. இவர்கள், "நவீன காவலர்களாக" இந்தியாவை கண்காணிப்பார்கள்" என்று காட்டமாகவும் கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட உத்தரபிரதேசத்தை போலவே மாறிக்கொண்டிருக்கிறது கர்நாடக மாநிலம் என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் விமர்சித்து கொண்டிருக்கின்றன.. அதிலும், ஹிஜாப் விவகாரம் முதல் மசூதிகளில் பாங்கு ஒலிக்கும் ஒலிபெருக்கி விவகாரமும் என பல்வேறு விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பொட்டு வைக்காத பெண்ணை பார்த்து, பாஜக எம்பி ஆவேசமாக திட்டியுள்ளது, அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+