Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரு ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவை மீண்டும் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முக்கியப் போக்குவரத்தாக இருந்து வந்த பைக் டாக்ஸிக்கு தடை விதித்து அம்மாநில அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதனால், கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பைக் டாக்ஸிக்கு விதிமுறைகளை வகுக்க உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் பைக் டாக்ஸி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் டாப் சிட்டிக்களில் பொதுமக்களின் முக்கியப் போக்குவரத்தாக பைக் டாக்ஸிக்கள் உள்ளன. கர்நாடக மாநிலத்தில் ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் பைக் டாக்ஸி சேவை வழங்கப்பட்டு வந்தது. டெக் சிட்டி, ஐடி தலைநகரம், ஸ்டார்ட் அப்புகளின் தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் மட்டும் பதிவு செய்யப்பட்ட சுமார். 1.20 லட்சம் பைக் டாக்ஸிகள் இயக்கி வந்தன.

bike taxi Karnataka

பெங்களூரில் அதிக அளவிலான ஐடி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வந்து இங்கு தங்கி லட்சக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். பெங்களூரைப் பொருத்தவரை முக்கியப் பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இந்தப் போக்குவரத்தை சமாளித்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்பது பெரும் சவாலே.

அந்த வகையில், ஐடி துறையினருக்கு பைக் டாக்ஸி பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். குறைந்த செலவு, விரைவான சேவை போன்றவற்றால் பெரும்பாலும் பைக் டாக்ஸி சேவையையே பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு பக்கம் இது வரப்பிரசாதமாக இருந்தாலும், பைக் டாக்ஸிகளில் செல்லும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வந்தன.

மேலும், பைக் டாக்ஸிக்காளால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனாலும், கடந்த 2021 ஆம் ஆண்டில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பைக் டாக்ஸிக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும், பைக் டாக்ஸியில் பயணம் செய்த பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது.

தொடர் பாலியல் துன்புறுத்தல், பைக் டாக்ஸி சேவையை தவறாகப் பயன்படுத்துவது போன்ற காரணத்தால் கடந்த ஆண்டு இந்த சேவைக்கு வழங்கிய அனுமதியை கர்நாடக அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து இந்த பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, பைக் டாக்ஸி நிறுவனங்கள் கர்நாடக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்தன.

இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், கடந்த ஜூன் 16 ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவையை நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பைக் டாக்ஸி சேவையை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்தப் போக்குவரத்து முறையை தடை செய்வதற்கு பதிலாக ஏன் ஒழுங்குபடுத்த முடியாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, பைக் டாக்ஸி போக்குவரத்து தடையால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. அதனால், பைக் டாக்ஸி சேவையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து, கர்நாடக மாநிலம் முழுவதும் பைக் டாக்ஸி சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+