சந்திரயான்-3ஐ நாங்கள் ஏவிட்டோம்.. ராகுல்யானை சோனியாவால் ஏவ முடியவில்லை..! அமித் ஷா நேரடி அட்டாக்!
பெங்களூரு: சந்திரயான் -3ஐ தாங்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிலையில், சோனியா காந்தி கிட்டத்தட்ட 20 முறை ராகுல்யானை ஏவ முயன்று ஒவ்வொரு முறையும் பரிதாபமாக தோல்வியடைந்தார் என அமித்ஷா கிண்டல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் இந்தியா முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் மிச்சம் இருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா காங்கிரஸின் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும், அந்தந்த மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல்: நாடாளுமன்ற தேர்தல்: வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி 7 மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவானது நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. அங்கு தான் ராகுல் காந்தியும் போட்டியிட இருக்கிறார். ஏற்கனவே கேரளாவிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
ரேபரேலி: அங்குள்ள அமேதி மற்றும் ரேபரேலியில் காங்கிரஸின் காந்தி குடும்பமே போட்டியிட்டு வந்த நிலையில், கடந்த தேர்தலில் ரேபரேலியில் ராகுல் காந்தி தோல்வியடைந்தார். இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போல அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியை சந்தித்த நிலையில், கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்றார். இதனை வைத்து தோல்வி பயத்தில் ராகுல் இருப்பதாக பாஜக விமர்சித்து வருகிறது.
அமித் ஷா: சோனியா காந்தி கிட்டத்தட்ட 20 முறை ராகுல்யானை ஏவ முயன்று ஒவ்வொரு முறையும் பரிதாபமாக தோல்வியடைந்தார் என அமித்ஷா கிண்டல் செய்துள்ளார். கர்நாடமா மாநிலம் பெலகாவியில் பிரசாரத்தில் பேசிய அவர்,"பாஜக ஆட்சியில் சந்திரயான்-3ஐ நாங்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினோம். ஆனால் சோனியா காந்தியோ கிட்டத்தட்ட 20 முறையாவது ராகுல்யானை ஏவ முயன்றார். ஆனால் பரிதாபகரமாக ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டிய ராகுல் காந்தி தற்போது ரேபரேலி தொகுதிக்கு மாறி இருக்கிறார்.
ராகுல் காந்தி: ரேபரேலியில் பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கிடம் அதிக வாக்கு வித்தியாசத்தில் ராகுல் பாபா தோல்வி அடைவார். ஒரு பக்கம் 12 லட்சம் கோடி ஊழல் செய்த காங்கிரஸ் கட்சியும் , மறுபுறம் 23 ஆண்டுகளாக எந்த ஒரு குற்றச்சாட்டு இல்லாமல் முதல்வராகவும் பிரதமராகவும் நாட்டுக்கு சேவை செய்பவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்கிறார் ராகுல் பாபா. மறுபுறம் கடந்த 23 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பிரதமர் மோடி இருந்திருக்கிறார்" என பேசினார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications