கர்நாடகா தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடி அத்தனை செய்துள்ளாரா.. எல்லாமே வீண்! பாஜகவினர் வேதனை
பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன செய்துள்ளார் தெரியுமா? ஆனால் இத்தனையும் வாக்குகளாக மாறாதது பாஜகவினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது .இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இந்த தேர்தலில் 126 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
224 சட்டசபை தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வென்றால் பெரும்பான்மை பலம் கிடைத்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். காங்கிரஸ் கட்சி 126 தொகுதிகளில் வென்று அத்துடன் 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

பாஜகவோ 60 தொகுதிகளில் வென்றுள்ளது 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மஜத 19 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்த நிலையில் பாஜக எப்படியாவது இந்த முறை ஆட்சியை தக்க வைத்து கொள்ள முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. வடமாநிலங்களில் மோடி அலை, மோடி மேஜிக் பலித்த நிலையில் தென் மாநிலத்தில் பலிக்கவில்லை.
இந்த தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன செய்தார். எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்தார் என்பதை பார்ப்போம். 7 நாட்கள் கர்நாடகா மாநிலத்தில் மோடி பிரச்சாரம் செய்திருந்தார். அந்த வகையில் 19 மாவட்டங்களில் 18 பொதுக் கூட்டங்களை நடத்தியிருந்தார். 5 முறை திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்திருந்தார்.

52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் தேர்தல் வெற்றிக்கான வியூகத்தை அமைத்தார். பெங்களூர், பெலகாவி, கல்புர்கி, மைசூரு ஆகிய 4 மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். 2 முறை பெலகாவி மாவட்டத்தில் பொதுக் கூட்டங்களை நடத்தியிருந்தார். 3 நாட்கள் பெங்களூர் பகுதியில் 38 கிலோ மீட்டருக்கு திறந்த வாகனத்தில் பயணம் செய்திருந்தார்.
கர்நாடகாவில் பாஜக வெல்வதற்காக இத்தனை முயற்சிகளை பிரதமர் மோடி எடுத்தும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. இதை எண்ணி நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர். எனினும் இந்த தேர்தலில் முழு முடிவுகள் வந்ததும் தோல்விக்கு காரணம் ஆராயப்படும் என பாஜக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications