பெங்களூருவுக்கு குட்நியூஸ்.. சில்க் போர்டு - ஏர்போர்ட் இடையே மெட்ரோ சேவை.. எப்போது தெரியுமா?
பெங்களூர்: பெங்களூரில் நீல வழித்தடத்தில் முதற்கட்டமாக பெங்களூர் சில்க்போர்டு முதல் பெங்களூர் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை எப்போது? அந்த வழித்தடத்தின் ரூட் என்ன? என்பது பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் மொத்தம் 96 கிலோமீட்டருக்கு மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. அதன்படி பெங்களூருவில் மாதவரா முதல் சில்க் இன்ஸ்ட்டியூட் (பச்சை வழித்தடம்) , ஒயிட்பீல்டில் இருந்து சல்லகட்டா வரை (பர்பிள் வழித்தடம்), ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை (மஞ்சள் வழித்தடம்) மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.

மேலும் தொடர்ந்து மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமானது தான் நீல வழித்தடம் (Blue Line). நீல வழித்தடத்தில் தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் நீலவழித்தடத்தில் மெட்ரோ ரயில் எப்போது இயங்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி துணை முதல்வர் டிகே சிவக்குமார் உறுதி செய்துள்ளார். அதாவது பெங்களூர் நீல வழித்தடம் என்பது பெங்களூர் சென்ட்ரல் சில்க் போர்டு முதல் பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பாதையாகும். பெங்களூர் நீலவழித்தடத்தில் மெட்ரோ பாதை என்பது மொத்தம் 58 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.15 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பெங்களூர் சென்ட்ரல் சில்க் போர்டு முதல் கேஆர் புரா வரை முதற்கட்டமாக 19 கிலோமீட்டர் தொலைவுக்கு 2026 டிசம்பர் மாதத்தில் பணிகளை முடித்து மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கேஆர்புரம் முதல் ஹெப்பால் வரையிலான மெட்ரோ பாதையில் 2027 ம் ஆண்டு டிசம்பர் மாதமும், ஹெப்பால் முதல் முதல் பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையம் வரை 2028 ஜூன் மாதமும் பணிகள் முடியும் என்று கூறியுள்ளார்.
சென்ட்ரல் சில்க் போர்டு முதல் விமான நிலையம் வரையிலான இந்த நீலநிற வழித்தடத்தின் ரூட் என்பது சென்ட்ரல் சில்க் போர்டு, அகரா ரோடு, இப்லூர், பெல்லந்தூர், காடுபீசனஹள்ளி, மாரத்தஹள்ளி, இஸ்ரோ, தொட்டனேகுந்தி, டிஆர்டிஓ ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், மகாதேவபுரா, கேஆர்புரா, நாகவரா/ஹெப்பால் இன்டர்சேஞ்ச் ஜோஜ், எலகங்கா, கெம்பேகவுடா விமான நிலையம் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் பெங்களூரில் உள்ள ஐடி ஊழியர்கள் மற்றும் விமான நிலையத்துக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு பெரிய அளவில் பலனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications