Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு போன வருடம் 17,545 கோடி.. இந்த வருடம் பூஜ்ஜியம், எப்படி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.17,545 கோடியாக ($2.1 பில்லியன்) இருந்தது. இன்று அவரது சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக சரிந்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 'ஃபோர்ப்ஸ் உலகின் பில்லியனர்கள் பட்டியல் 2024' இன் படி, கடன் உள்பட பெரும் சிக்கலில் உள்ள பைஜூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பைஜு ரவீந்திரன் இனி கோடீஸ்வரர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு, ரவீந்திரனின் நிகர மதிப்பு ரூ.17,545 கோடியாக இருந்தது ($2.1 பில்லியன்). ஆனால் இன்று அவரது சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக சரிந்துள்ளது.

Byju Raveendran s Net Worth Was Rs 17 545 Crore A Year Ago Today It Is 0 value

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டார்ட்-அப்களில் ஒன்றாக அறியப்பட்ட நிறுவனம் பைஜூஸ். இந்தியாவின் புகழ்பெற்ற எட்டெக் நிறுவனமாக விளங்கிய பைஜூஸ் கம்பெனியாக 2011-ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ரவீந்திரன் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆன்லைன் எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட பைஜூஸ், கல்வி உலகில் மாபெரும் நிறுவனமாக 2020களில் வளர்ந்தது. கொரோனா காலத்தில் பலரும் ஆன்லைனில் கல்வி பயின்றதால், பைஜூஸ் நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது. இதன்காரணமாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இடம்பித்தார் அதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன். அன்று கோடிகளில் புரண்ட பைஜூஸ் நிறுவனம் கொரோனா காலம் முடிந்த பின்னர் மெல்ல மெல்ல சிக்கலை சந்திக்க தொடங்கியது.. குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சிக்கல்களில் சிக்க ஆரம்பித்தது. குறிப்பாக கணக்கு முறைகேடுகள், தவறாக நிர்வாக அணுகுமுறை, பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, அடுத்தடுத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விலகல் என பெரிய சிக்கல்களை சந்தித்தது.

இது ஒருபுறம் எனில் பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் எழுந்ததால், ரவீந்திரனின் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சோதனை நடந்தது. விசாரணையில் கடந்த 2011 முதல் 2023 வரையிலான காலத்தில் ரூ.28,000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை அந்த நிறுவனம் பெற்றிருப்பது தெரியவந்தது.

மேலும் அதே காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பைஜூஸ் நிறுவனம் ரூ.9,754 கோடியை அனுப்பியதும அமலாக்கத்துறை சோதனையில் தெரியவந்தது. அந்நிய முதலீடுகள் தொடர்பாக போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதுடன் ரூ.9,362 கோடிக்கு அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் பைஜூஸ் நிறுவனம் கடந்த ஓராண்டாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

ஒரு பக்கம் ஆன்லைனில் கல்வி கற்போரின் எண்ணிக்கை சரிவு, மறுபக்கம் மூலதன செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் பைஜூஸ் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது ஒருபுறம் எனில் அதன் முதலீட்டாளர் குழு உறுப்பினர்களும், ரவீந்திரனுடனான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி கடந்த பிப்ரவரி மாதம் வெளியேறிவிட்டனர். இதனால் பைஜூஸ் நிறுவனம் ஒரே போன் காலில் பலரை வீட்டுக்கு அனுப்ப தொடங்கிவிட்டது. பைஜூஸ் ஊழியர்கள் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளனர். அண்மையில் வாடகை கூட செலுத்த முடியாமல் பெங்களூருவில் உள்ள தனது பிரம்மாண்ட அலுவலகத்தை காலி செய்தது.

இந்த சூழலில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.17,545 கோடியாக ($2.1 பில்லியன்) இருந்தது. இன்று அவரது சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக சரிந்துள்ளது.

ஃபோர்ப்ஸ் நிறுவனம் இந்திய கோடீஸ்வரர்களைப் பற்றிய தனது கட்டுரையில் கூறுகையில் "கடந்த ஆண்டு பட்டியலில் இருந்து எட்டெக் நட்சத்திரம் பைஜூஸ் ரவீந்திரன் உட்பட நான்கு பேர் மட்டுமே இந்த முறை கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறி உள்ளார்கள். பைஜூஸ் நிறுவனம் பல நெருக்கடிகளைச் சந்தித்ததன் காரணமாக அதன் மதிப்பீடு பிளாக்ராக் மூலம் 1 பில்லியன் டாலராகக் குறைக்கப்பட்டது. 2022 இல் அதன் உச்ச $22 பில்லியன் ஆக இருந்தது" என்று கூறியுள்ளது.

ரவீந்திரன் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறிய நிலையில், ஒட்டுமொத்த உலகில் பில்லியனர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உலகில் இப்போது 2,781 பில்லியனர்கள் உள்ளனர், கடந்த ஆண்டை விட 141 பேர் அதிகம் ஆகும். இந்தியாவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 116 பில்லியன் டாலர் சொத்துக்களுடன், சமீபத்திய ஃபோர்ப்ஸ் தரவரிசையின்படி மிகப்பெரிய செல்வந்தர் ஆவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+