ஹாரன் அடித்தாலே அடி-உதை..பெங்களூர் ரோட்டில் அடாவடி..சுற்றித்திரியும் ‛பொடி’ ரவுடிகள்..ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ரோட்டில் ‛ஹாரன்' அடித்தாலே அடி-உதை தான் கிடைக்கும் எனும் வகையில் ‛பொடி' ரவுடிகள் அடாவடி செய்து காரில் சென்றவரை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பாக ஷாக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெங்களூர் ரோட்டில் அடா

பெங்களூரில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று கேரளாவை சேர்ந்தவர் தனது நண்பர்களுடன் காரில் வர்த்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெங்களூர் வர்த்தூரில் உள்ள டிஎஸ்ஆர் ரிவர் பகுதியில் பைக், ஸ்கூட்டரில் சிலர் சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் சாலையில் பிற வாகனங்களுக்கு வழி விடாமல் இடையூறு செய்யும் வகையில் சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து காரை ஓட்டியவர் அவர்களிடம் வழி கேட்கும் வகையில் ஹாரன் அடித்தார். ஆனால் அவர்கள் வழி விடாமல் சென்றனர்.

இதையடுத்து மீண்டும் ஒருமுறை கார் ஓட்டியவர் ஹாரன் அடித்தார். இதையடுத்து கோபமடைந்தவர்கள் பைக், ஸ்கூட்டரை நடுரோட்டில் விட்டு வந்து கார் ஓட்டியவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார். இதனை காரில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.

அந்த வீடியோவில், சாலையில் காரின் முன்பு ஸ்கூட்டர், பைக்கில் சிலர் செல்கின்றனர். இதையடுத்து கார் ஓட்டுனர் ஹாரன் அடித்து வழிகேட்கிறார். ஆனால் அவர்கள் வழி விடாமல் காரின் முன்பு சிறிது தூரம் செல்கின்றனர். அதன்பிறகு திடீரென்று நடுரோட்டில் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 3 பேர் இறங்கி வருகின்றனர்.

Car driver attacked by a 3 member gang, after press horn to gets way in Bangalore

இதில் ஒருவர் தகாத வார்த்தையால் கார் டிரைவரை திட்டி தாக்குதல் நடத்தினர். கார் ஓட்டுனர், ‛‛சாரி அண்ணா' என கெஞ்சியும் விடாத அந்த நபர் ‛இது என்ன ஹைவேயா? நீ ஹாரன் அடித்து கொண்டு வருகிறாய்? எனக்கேட்டு மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தினார். இதனால் பயந்துபோன ஓட்டுனர் காரை அப்படியே ரிவர்ஸ் எடுத்து வந்த வழியே மீண்டும் திரும்பி செல்கிறார்.

மேலும் இந்த வீடியோவை அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டு பெங்களூர் மாநகர போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை பார்த்த போலீசார், ‛‛சம்பவம் குறித்து வர்த்தூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயல்களுக்கு கொஞ்சமும் இடமில்லை. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்திய நிலையில் 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+