சிக்கலில் பிரகாஷ் ராஜ்.. சந்திரயான்-3 திட்டத்தை கேலி செய்வதா? பொங்கிய இந்து அமைப்புகள்..வழக்கு பதிவு
பெங்களூர்: சந்திரயான் 3 விண்கலம் திட்டத்தை கேலி சேய்யும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் நாளை நிலவில் தரையிறங்க உள்ளது. நிலவு குறித்த ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல் ஆக இருக்கும் இந்த சந்திரயான் விண்கலம் திட்டம் இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா நிகழ்த்த போகும் இந்த சரித்திர சாதனையை இந்தியாவின் 140 கோடி மக்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

கடந்த சில தினங்களாகவே சந்திரயான் 3 விண்கலம் குறித்தே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் அதிகமாக பதிவிடுவதைக் காண முடிகிறது. தற்போது நிலவுக்கு நெருக்கமாக சுற்றி வரும் விக்ரம் லேண்டர் நாளை மாலை 6.04 மணியளவில் தரையிறங்க உள்ளது. நிலவில் முத்திரை பதிக்கும் இஸ்ரோவின் சாதனை குறித்து, அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "வாவ்... நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என கேப்ஷன் பதிவிட்டு ஒருவர் டீ ஆற்றுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். #justasking என்ற ஹேஷ்டேக்குடன் இதை பிரகாஷ் ராஜ் பதிவிட்டு இருக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரக்கூடியவர்.
இந்த நிலையில், மோடியை விமர்சிக்கும் விதமாக சந்திரயான் 3 விண்கலம் திட்டத்தை பிரகாஷ் ராஜ் கேலி செய்து இருப்பதாக நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், பிரகாஷ் ராஜ் மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கர்நாடகாவின் பகால்கோட் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இந்த புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications