கர்நாடகாவில் கனமழை.. காவிரியில் அதிகரித்த நீர்வரத்து! ஒகேனக்கல்லில் தடை இல்லை.. ஹேப்பி நியூஸ்
பெங்களூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கர்நாடகாவில் காவிரி ஆறு பிறந்து தமிழகத்தின் வழியாக கடலை சேர்கிறது. கடந்த ஒரு வாரமாக கர்நாடகாவில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கிறது.

அதாவது குடகு, மைசூர், மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கேஆர்எஸ் எனும் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல் மேகதாது, கனகபுரா, பிலிகுண்டுலு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியின் துணை நதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கோடை காலத்திலும் காவிரியில் வெள்ளம் பாய்வதை காண முடிகிறது.
கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்துக்கு கடந்த 10ம் தேதியில் இருந்து காவிரி நீர் சரிய தொடங்கியது. கடந்த 14ம் தேதி வெறும் 700 கனஅடி தண்ணீர் மட்டுமே காவிரியில் வந்தது. அதன்பிறகு நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் அதிகரித்தது. நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து என்பது 4 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.
இந்நிலையில் தான் இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போதைய சூழலில் ஒகேனக்கல்லில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
-
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications