சந்திரயான் 3.. நிலவில் தரையிறங்கியதும் செய்யப்போகும் வேலை இதுதான்.. இவ்ளோ விஷயம் இருக்கா
பெங்களூர்: நிலவை மிக நெருக்கமாக சுற்றி வரும் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும் என்னென்ன ஆய்வுகளை எல்லாம் மேற்கொள்ளும் என்பது குறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதன்மை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவால் கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்க ஆயத்தமாகி வருகிறது. கிட்டத்தட்ட 40 நாட்கள் பயணத்தில் பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கி.மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவை சந்திரயான் நெருங்கி உள்ளது. தற்போது சந்திரயான் 3 விண்கலத்தின் உந்து விசை கலனில் இருந்து வெளியே வந்துள்ள விக்ரம் லேண்டர் கருவி, நிலவை மிக நெருக்கமாக சுற்றி வருகிறது.

நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயானில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. அதன்பிறகு லேண்டர் கருவியில் இருந்து வெளியே வரும் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் சுமார் 14 நாட்கள் ஆய்வு செய்ய இருக்கிறது. இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3 விண்கலம் 7 விதமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதன்மை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:- லேண்டர் தரையை தொட்டதும் உடனடியாக அதில் இருக்கும் சென்சார் பூமிக்கு தகவல் அனுப்பி விடும். நிலவில் இருந்து நமக்கு தகவல் வந்து சேர 1.25 நிமிடம் ஆகும். ஏனெனில் அவ்வளவு தொலைவில் உள்ளது. ஒளியின் வேகத்தில் வந்தாலும் கூட அவ்வளவு நேரம் ஆகும்.
கொஞ்ச நேரம் காத்திருந்து தூசு, துகள்கள் எல்லாம் அடங்கிய பிறகு, லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வரும். லேண்டர் சில ஆய்வுகளை செய்யும். இதேபோல் ரோவர் சில ஆய்வுகளை செய்யும். இரண்டின் ஆய்வு என்னவென்றால் நிலவு குறித்த தகவல்களை சேகரிக்கும். லேண்டர் செய்யும் முக்கியமான ஆய்வு என்னவென்றால், பூமியில் ஏற்படும் நிலநடுக்கம் போன்று நிலாவில் ஏற்படும் நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்யும்.
எடுத்துக்காட்டாக ரோவர் என்ன செய்யும் என்றால் நிலவின் தரைப்பகுதியில் தாதுப்பொருட்கள் என்ன இருக்கு.. எவ்வளவு சதவீதம் இருக்கு என்பதை ஆராய்ச்சி செய்யும். ரோவர் செய்யும் ஆராய்ச்சிக்கும் சந்திரயான் 2 க்கும் ஒரு தொடர்பு உள்ளது. சந்திரயான் 2ல் உள்ள ஆர்பிட்டர் நிலவை சுற்றி சுற்றி வந்து நிலவின் தரையிலுள்ள தாதுப்பொருட்களை பற்றி தொலையுணர்வில் இருந்து ஆய்வு செய்து வைத்துள்ளது.
ஆனால், 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இந்த ஆய்வை செய்துள்ளது. ஆனால் உண்மையிலேயே இருக்கா என்பதை ரோவர் தரையில் இறங்கி பார்த்து சொல்லும். அதில் இருந்து நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications