ஜஸ்ட் மிஸ்.. கடும் இழுபறியில் கரையேறிய தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ்!
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் - பாஜக வேட்பாளர் சப்தகிரி கௌடா இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தினேஷ் குண்டு ராவ் 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 36 மையங்களில் வாக்கு என்னும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கர்நாடகாவில் ஆளும் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 224 தொகுதிகளில் 113ல் வென்றால் தனிப்பெரும்பான்மை என்ற நிலையில், அந்த மேஜிக் நம்பரை கடந்து கம்பீரமாக வெற்றி நடை போட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி.
தற்போதைய நிலவரப்படி முடிவு அறிவிக்கப்பட்ட 113 தொகுதிகளில் காங்கிரஸ் 68, பாஜக 30, மஜத 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 111 தொகுதிகளில் காங்கிரஸ் 68; பாஜக 34; மஜத 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெங்களுரு காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமன தினேஷ் குண்டு ராவ் இன்று காலை தொடக்கத்தில் பின்னடவை சந்தித்து வந்தார். பின்னர், அவர் முந்துவதும், எதிர் வேட்பாளர் முந்துவதுமாக நிலைமை இழுபறியாகச் சென்றது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் தினேஷ் குண்டுராவ், 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தினேஷ் குண்டு ராவ், 54,118 வாக்குகள் பெற்று, பாஜகவின் சப்தகிரி கௌடாவை 105 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வெற்றி பெற்றுள்ள அதேசமயம், தமிழ்நாட்டிற்கான பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications