கர்நாடகாவில் இனி காங்கிரஸ் தோற்கும்.. நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்ன தகவல்.. விமர்சனத்தின் பின்னணி
பெங்களூர்: ‛‛அரசியலில் எதிர்க்கட்சிகள் எப்போது ஜெயிப்பது இல்லை. ஆளும் கட்சி தான் தோற்கடிக்கப்படுகிறது. இப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தான் எதிர்காலத்தில் தோல்வியை சந்திக்கும்'' என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பாக கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ்.. தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட பல மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். பாஜக மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்வதாக பலமுறை விமர்சனம் செய்து உள்ளார்.

அதுமட்டுமின்றி பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை பொது மேடைகளில் பிரகாஷ் ராஜ் கடுமையாக சாடி உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகா மாநிலம் மங்களூரில் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறிய கருத்து பரபரப்பை கிளப்பி உள்ளது.
அதாவது கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் ஆகியோர் செயல்பட்டு வருகிறார். இப்படியான சூழலில் தான் காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் தோல்வியை சந்திக்கும் என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். பாஜகவை மட்டுமே விமர்சனம் செய்து வந்த பிரகாஷ் ராஜ் தற்போது காங்கிரஸ் கட்சி மீது இப்படி கூறியிருப்பது பேசும்பொருளாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் நடிகர் பிரகாஜ் ராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛மாநிலத்தில் (கர்நாடகாவில்)நலத்திட்டங்களை செயல்படுத்த அரசிடம் போதிய நிதி இல்லை என்று சொல்லப்படுகிறது. ரூ.15 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது'' என்று கேள்வி கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ், ‛‛காங்கிரஸ் கட்சி இப்போது ஆட்சியில் உள்ளது. அவர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால் அரசியலில் எதிர்க்கட்சிகள் எப்போது ஜெயிப்பது இல்லை. ஆளும் கட்சி தான் தோற்கடிக்கப்படுகிறது. இப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சி தான் தோல்வியை சந்திக்கும். இந்த தோல்வி என்பது முந்தைய ஆட்சியை எப்படி கொடுத்தார்கள் என்பதன் அடிப்படையில் தான் அமையும்.
நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றால் அவர்கள் பிசினஸா செய்கிறார்கள்? நம் நாட்டிலும் சரி, ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் பணத்தில் தான் அரசுகள் நடக்கின்றன. இதனால் அரசு எங்கு தோல்வியடைந்தது என்பது பற்றி கேள்வி கேட்க வேண்டும். எங்கு கடன் அதிகரித்தது? அதனை சரிசெய்யாதது ஏன்? என்பது பற்றி கேள்வி எழுப்ப வேண்டி உள்ளது.
சமீபத்தில் கூட உச்சநீதிமன்றம் இலவச திட்டங்களால் மக்கள் வேலை செய்ய விரும்புவது இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளது. இல்லாதவர்களுக்கு இலவச திட்டங்களை வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது. பெரிய நிறுவனங்களில் கடன்களை தள்ளுபடி செய்யப்படுவது பற்றியதில் என்ன நிலைப்பாடு என்ற கேள்வி எழுகிறது. இதனால் எந்த கட்சி மாநிலத்தை ஆள்கிறது என்பதை பாராமல் வரி செலுத்தும் மக்களின் பணத்தை அரசு எப்படி பயன்படுத்துகிறது என்பதன் அடிப்படையில் கேள்வி கேட்க வேண்டும்'' என்றார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications