பூமிக்கடியில் புதையல்.. காப்பர் பானையை திறந்து பார்த்தால் அரை கிலோ தங்கம்.. ‛ஓ மை காட்'
பெங்களூர்: புதிதாக வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8 ம் வகுப்பு மாணவனுக்கு புதையல் கிடைத்தது. காப்பர் குடம் நிறைய 470 கிராம் எடையில் தங்க நகைகள் இருந்தது.
கர்நாடகாவின் கதக் மாவட்டத்தில் லக்குந்திஎன்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கங்கவ்வா பசவராஜ் ரித்தி. இவரது மகன் பெயர் பிரஜ்வல் ரித்தி. இவருக்கு 13 வயது ஆகிறது. 8 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தான் கங்கவ்வா தாங்கள் வசித்து வந்த வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கினார்.

இதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அஸ்திவாரம் தோண்டும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அங்கு பசவராஜ் ரித்தியும் வேலை செய்து கொண்டிருந்தான்.
பூமிக்கடியில் காப்பர் பானை கிடைத்தது. பிரஜ்வல் ரித்தி உடனடியாக பானையை வெளியே எடுத்தார். அந்த பானையை திறந்து பார்த்தபோது உள்ளே தங்க நகைகள் இருந்தன. கம்மல், செயின், நெக்லஸ் உள்பட ஏராளமான தங்க நகைகள் இருந்தன. உடனடியாக தனது குடும்பத்தினரிடம் கூறினார்.
அவர்கள் பெரியவர்களிடம் கூறியதோடு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தாசில்தாருடன் வந்து புதையலை கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இதுபற்றி லக்குந்தி பாரம்பரிய பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் ஆணையர் சாரணு கோகேரி கூறுகையில், ‛‛புதையலில் மோதிரம், கைகச்செயின், வளையல், நெக்லஸ் உள்பட பல தங்க நகைகள் இருந்தன.
இந்த நகை எந்த காலக்கட்டத்தை சேர்ந்தது என்பது தெரியவில்லை. இதுபற்றி ஆய்வு செய்யப்படும். ஆனால் பானையை பார்க்கும்போது இது பழங்காலத்தை சேர்ந்ததாக தெரிகிறது. இதுபற்றி தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து நகை எந்த காலத்தை சேர்ந்தது என்பதை தெரிவிப்பார்கள் ''என்றார்.
இதுபற்றி கதக் எஸ்பி ரோஹன் ஜெகதீஷ் கூறுகையில், ‛‛8 ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரஜ்வல் ரித்தி புதையலை எடுத்தான். உடனடியாக கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம் கூறினார். அவனுடைய நேர்மையை பாராட்டுகிறோம். புதையல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். புதையல் கிடைத்த பானையி் மொத்தம் 22 தங்க நகைகள் இருந்தன. அதன் எடை 470 கிராம் ஆகும். காப்பர் பானை மட்டும் 630 கிராம் எடையுடன் இருந்தது. தற்போது புதையல் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications