தொடரும் பிளாக் பங்கஸ் தாக்குதல்கள்.. கர்நாடகாவிலும் 3 பேருக்கு பாதிப்பு.. கலங்கடிக்கும் கரும்பூஞ்சை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்; கர்நாடகாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேருக்கு பிளாக் பங்கஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

    இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் சிலருக்கும் இந்தியாவில் பிளாக் பங்கஸ் எனப்படும் மியூக்கர்மைக்கோசிஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் 50 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது.

    போபால், , ஜபல்பூர் போன்ற மத்திய பிரதேச நகரங்களில் பலருக்கு அடுத்தடுத்து பிளாக் பங்கஸ் ஏற்பட்டது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூடுதல் மருத்துவமனை பெட்கள் அங்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.

    கர்நாடகா

    கர்நாடகா

    இந்த நிலையில் தற்போது கர்நாடகாவிலும் 3 பேருக்கு பிளாக் பங்கஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பகல்கோட் பகுதியில் ஒருவருக்கும் மற்ற இரண்டு தனியார் மருத்துவமனையில் இருவருக்கும் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்போடெரிசின் பி மருந்து இல்லாமல் அம்மாநில மருத்துவமனைகள் சிரமப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா

    கொரோனா

    இந்தியாவில் கொரோனா நோயாளிகள் பலருக்கு இந்த கரும்பூஞ்சை ஏற்பட தொடங்கி உள்ளது. முக்கியமாக நீரழிவு குறைபாடு உள்ளவர்கள் பலருக்கும் கரும்பூஞ்சை எனப்படும் பிளாக் பங்கஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரு குழுவாக காணப்பட கூடிய அச்சு வடிவிலான பூஞ்சைகளின் தொகுப்புதான் மியூக்கர்மைக்கோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.

    எங்கு இருக்கும்

    எங்கு இருக்கும்


    அழுகிய பழங்கள், இறந்த விலங்குகளின் உடல்கள் என்று பல இடங்களில் இந்த கரும்பூஞ்சை காணப்படும். இதுதான் தற்போது மனிதர்களை தாக்க தொடங்கி உள்ளது. கண்கள், மூளையை தாக்கும் இந்த பங்கஸ் தாக்குதல் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட தொடங்கி உள்ளது. பொதுவாக உடலில் எதிர்ப்பு திடீரென குறையும் போது, சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும் போதும் இந்த கரும்பூஞ்சை ஏற்பட வாய்ப்புள்ளது.

     தீவிரம்

    தீவிரம்

    தீவிர கொரோனாவிற்கு மருந்துகள் எடுக்கும் நபர்கள் சிலருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் நேரங்களில் இந்த பிளாக் பங்கஸ் நோய் தாக்குதல் ஏற்படுகிறது. அதிலும் நீரழிவு நோய் உள்ளவர்கள், இருதயம் பாதிக்கப்பவர்கள் பலர் கொரோனாவிற்கு எதிராக ஸ்டிராய்டு மருந்துகளை எடுக்கிறார்கள். இந்த மருந்துகள் காரணமாக உடலில் இயல்பாக இருக்கும் எதிர்ப்பு சக்தி குறைந்து, பலருக்கு கரும்பூஞ்சை தாக்குதல் நடக்கிறது.

    எப்படி செல்கிறது

    எப்படி செல்கிறது

    மூக்கு வழியாக அல்லது காது வழியாக உடலுக்குள் செல்லும் கரும்பூஞ்சை இதயம், மூளையை தாக்கும் ஆபத்து கொண்டது. தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி, எச்சிலில் ரத்தம், தொண்டையில் வலி, மூக்கடைப்பு ஆகியவை பிளாக் பங்கஸ் ஏற்பட்டால் வர கூடிய அறிகுறிகள் ஆகும்.

    ஆபத்து

    ஆபத்து

    இதன் இறப்பு சதவிகிதம் 50% ஆகும். 50% இறப்பு விகிதம் இருப்பதால் கரும்பூஞ்சை மிகவும் ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆம்போடெரிசின் பி அளித்தல், உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது இந்த கரும்பூஞ்சை தாக்குதலுக்கான சிகிச்சை முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியர்களை இந்த இரண்டாம் அலை கொரோனா தாக்குதலில் கரும் பூஞ்சை அதிகம் தாக்க தொடங்கி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+