எதிர்ப்பால் பின்வாங்கிய அரசு.. கர்நாடகாவில் 3 நாட்களுக்கு பஸ் கட்டணம் கிடையாது.. எடியூரப்பா அதிரடி!
பெங்களூரில் இருந்து கர்நாடாகாவில் இருக்கும் பிற மாவட்டங்களுக்கு செல்ல விரும்பும் மக்கள் அடுத்த 3 நாட்களுக்கு கட்டணம் எதுவும் இன்றி பேருந்தில் பயணிக்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் இருந்து கர்நாடகாவில் இருக்கும் இருக்கும் பிற மாவட்டங்களுக்கு செல்ல விரும்பும் மக்கள் அடுத்த 3 நாட்களுக்கு கட்டணம் எதுவும் இன்றி பேருந்தில் பயணிக்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா முழுக்க இந்த சலுகை இன்று அமலுக்கு வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெவ்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டு இருக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப மத்திய அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கர்நாடக அரசு மொத்தம் 600 சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.

கர்நாடகாவில் மாநிலத்திற்கு உள்ளே இயங்கும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் செல்ல நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 55 பேர் பயணிக்க கூடிய ஒரு பேருந்தில் மொத்தம் 30 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு பேருந்தில் மூன்று பேர் இருக்க கூடிய இருக்கையில் இரண்டு பேர் மட்டுமே இருக்க முடியும்.இரண்டு பேர் இருக்க கூடிய சீட்டில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். சமூக இடைவெளி விட வேண்டும் என்பதற்காக இப்படி மிக குறைவான எண்ணிக்கையில் பயணிகள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு பெரிய அளவில் இழப்பை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகா போக்குவரத்துத்துறை பெரிய நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த வருடமே அங்கு 5.3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது இதனால் பேருந்து கட்டணத்தை கர்நாடக மாநில அரசு இரட்டிப்பாக உயர்த்தி உத்தரவு வெளியிட்டது.

நஷ்டத்தை சமாளிக்கும் விதமாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியது. அரசின் இந்த முடிவை காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தது. பல்வேறு அமைப்புகள் அங்கு போராட்டத்தில் குதிப்போம் என்றும் இவர்கள் அறிவித்தனர். இரவோடு இரவாக அரசுக்கு எதிராக அழுத்தம் வைக்கப்பட்டது.

முக்கியமாக கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர், இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்தார். அரசுக்கு நான் வேண்டுமானால் பணம் தருகிறேன். உடனே இந்த அறிவிப்பை திரும்ப பெறுங்கள் இல்லையென்றால் போராட்டத்தில் குதிப்போம் என்று கூறினார். மனித உரிமை அமைப்புகளும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியது.

இந்த நிலையில் அரசு தனது முடிவை மாற்றியுள்ளது. டிக்கெட் விலையை இரட்டிப்பாக்கி அறிவித்ததை அரசு திரும்ப பெற்றது. மேலும் பெங்களூரில் இருந்து கர்நாடாகாவில் இருக்கும் இருக்கும் பிற மாவட்டங்களுக்கு செல்ல விரும்பும் மக்கள் அடுத்த 3 நாட்களுக்கு கட்டணம் எதுவும் இன்றி பேருந்தில் பயணிக்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா முழுக்க இந்த சலுகை இன்று அமலுக்கு வருகிறது.













Click it and Unblock the Notifications