காலையிலேயே லைனில் நின்ற குடிமகன்கள்.. கர்நாடகாவில் இன்று அனைத்து சோனிலும் திறக்கப்படும் மதுக்கடைகள்!
கர்நாடகாவில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதால் அங்கு குடிமகன்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதால் அங்கு குடிமகன்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றில் இருந்து மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய லாக் டவுனில் பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுக்க பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆனால் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் மண்டலத்தில் மது விற்பனைக்கு அனுமதி கிடையாது. விதிமுறை இப்படி இருந்தாலும் இந்தியாவில் சில மாநிலங்களில் சிவப்பு மண்டலத்திலும் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. அரசின் வருமானத்தை கருத்தில் கொண்டு சிவப்பு மண்டலத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கர்நாடகாவில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது . மாநிலம் முழுக்க சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் என்று மண்டல வேறுபாடு எதுவும் இன்றி மொத்தமாக மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது. இதனால் அங்கு குடிமகன்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
Karnataka: People seen standing in a queue outside a liquor shop in Hubli as state government permits sale of liquor between 9 am to 7 pm from today. pic.twitter.com/fYSHV3WZzv
— ANI (@ANI) May 4, 2020
பெங்களூரில் மொத்தம் 24 வார்டு கட்டுப்பாட்டு பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் 26 இடங்களில்தான் கொரோனா தீவிரமாக பரவி உள்ளது. அதேபோல் வேறு சில மாவட்டங்களிலும் கர்நாடகாவில் இப்படி சில கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது. இந்த கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பெங்களூர் முழுக்க மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மது விற்பனை செய்யப்படும். இதனால் காலையிலே அங்கு மது வாங்க மக்கள் பலர் வரிசையாக லைனில் நிற்கிறார்கள். ஒரு மாதத்திற்கு பின் இவர்கள் மது வாங்க வரிசையில் இருக்கிறார்கள். தனி மனித இடைவெளிவிட்டு இவர்கள் லைனில் நிற்கிறார்கள்.
Recommended Video
ஆனால் கர்நாடகாவில் மது கடைகளில் அமர்ந்து குடிக்கும் பார்களுக்கு அனுமதி கிடையாது. மதுவை வாங்கிவிட்டு வீடுகளுக்கு சென்று மது குடிக்கலாம். அதேபோல் கடைகளில் மதுவை வாங்கும் போது ஆறு அடி இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் இருந்து மது அருந்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுகடைகளில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications