காவிரி ஆற்றில் போட்டோ ஷூட் நடத்திய சசிகலா-சந்துரு தம்பதி.. படகு கவிழ்ந்து பெரும் சோகம்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மைசூருவில் நிச்சயதார்த்தம் ஆன இளம் தம்பதி படகில் அமர்ந்து போட்டோஷூட் நடத்திய போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
வாழ்வில் திருமண புகைப்படங்கள் காலத்திற்கும் பெயர் சொல்ல வேண்டும் என நினைக்கும் தம்பதிகள் அண்மைக்காலமாக வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பல தம்பதியினர் மறக்க முடியாத அளவுக்கு தங்களது திருமண ஆல்பமும், திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

புகைப்படங்கள்
ஆனால் அப்படி புகைப்படங்கள் நினைவுகளை பத்திரப்படுத்தவும் உணர்வு காலத்திற்கு பின்பு எழுப்ப வேண்டும் என்ற ஆசையில் சிலர் விபரீதமான முயற்சிகளை செய்கிறார்கள். அண்மையில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஆடையில்லாதது போன்ற எடுத்த போட்டோ ஷூட் ஈர்ப்பை பெற்றாலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதேநேரம் ஒரு தம்பதி பாரதியார், செல்லம்மா வேடத்தில் உருவாக்கிய போட்டோ ஷூட் வரவேற்பை பெற்றது.

திருமண ஆல்பம்
இப்படி திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின் எடுக்கப்படும் புகைப்பட ஆல்பங்கள் சமூக வலைதளங்களில் தினசரி பேசுபொருளாகி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் நிச்சயதார்த்தம் ஆன இளம் தம்பதி படகில் அமர்ந்து போட்டோஷூட் செய்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.. இதனால் திருமண வீடே துக்கத்தில் மூழ்கி உள்ளது.

10 நாளில் திருமணம்
மைசூரு மாவட்டத்தில் உள்ள முதுகுத்தூரில் கடந்த வாரம் சசிகலா (20) மற்றும் சந்துரு (30) ஆகியோருக்கு கல்யாண நிச்சயார்த்தம் நடந்துள்ளது. வரும் 22ம் தேதி திருமணம் நடத்துவது என தேதி முடிவு செய்யப்பட்டது. சசிகலா சந்துரு தம்பதி திருமணத்திற்கு முன்பான போட்டோஷூட்டை காவிரி ஆற்றில் நடத்தியுள்ளனர்.

விபரீதமான போட்டோ ஷூட்
மீனவர் ஒருவருடன் படகில் அமர்ந்து போட்டோஷூட்டுக்கு தயாரானபோது தடுமாறி மூவரும் ஆற்றில் விழுந்தனர். மீனவர் பத்திரமாக நீந்தி கரையேறிய நிலையில் இளம் ஜோடி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை இருவரின் உடல்களையும் மீட்டனர்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications