"சனாதனம்".. உபி-யையே ஓவர்டேக் செய்யும் கர்நாடகா.. கோயில்களில் "கோ பூஜை".. திடீர் அறிவிப்பு.. ஏன்
கர்நாடக மாநில கோயில்களில் கோ பூஜை செய்யுமாறு உத்தரவு ஒன்று வெளியாகி உள்ளது
பெங்களூரு: "சனாதன இந்து தர்ம நடைமுறையை மக்கள் மறந்துவிட வேண்டாம், அக்டோபர் 26-ம் தேதி கோயில்களில் 'கோ பூஜை'க்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட உத்தரபிரதேசத்தை போலவே மாறிக் கொண்டிருக்கிறது கர்நாடக மாநிலம்.. இங்கு நடைபெற்று வருகிற பாஜக ஆட்சியானது, பல்வேறு அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு, பரபரப்பை கிளப்பி விட்டு கொண்டிருக்கின்றன.
சமீபகாலமாகவே, அதாவது ஹிஜாப் விவகாரம் தலைதூக்கியதில் இருந்தே கர்நாடகத்தின் அரசியல் நிகழ்வுகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன..

ஸ்பீக்கர் மசூதி
ஹிஜாப் விவகாரம் மட்டுமல்ல, ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து, மசூதிகளில் பாங்கு ஒலிக்கும் ஒலிபெருக்கி விவகாரமும் விஸ்வரூபம் எடுத்தது.. வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும் இந்த ஒலிபெருக்கி விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. அதேபோல, அம்மாநிலத்தில் 8-ம் வகுப்பு கன்னட மொழிப் பாடத்தில், சாவர்க்கர் சிறையில் இருந்தபோது புல் புல் பறவை மீது அமர்ந்து தாய்மண்ணுக்கு வந்து சென்றார் என்று இடம்பெற்றிருந்ததும் கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது,,

புல் புல்
அந்தமான் சிறையில் சாவர்க்கர் இருந்தபோது, ஜெயில் அறையில் சிறிய துளை கூட கிடையாது.. ஆனால் அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது அமர்ந்து தினமும் தாய் மண்ணிற்கு சாவர்க்கர் வந்து செல்வார்" என்று இடம் பெற்றிருந்தன.. ஆறறிவு கொண்ட மனிதன், பறவைமீது எப்படி உட்கார முடியும்? என்று கர்நாடக மாநில பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு இன்றுவரை விளக்கங்கள் முழுமையாக தரப்படவில்லை என்பது வேறு விஷயம்..

இந்துத்துவா
அதுபோலவேதான், கர்நாடகத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தில் முட்டை போடக்கூடாது என்றுகூட ஒரு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல்கள் வெடித்தன.. இந்துத்துவா என்ற பெயரில் சனாதன தர்மத்தை பேசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக அந்த மாநிலத்தில் எழுந்துவந்தபடியே உள்ளது.. இந்நிலையில், ஒரு முக்கிய அறிவிப்பு அம்மாநிலத்தில் வெளியாகி உள்ளது.. அதன்படி, வருகின்ற 26ம்தேதி அரசு கோயில்களில், கோ வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.. இதற்காக ஒரு சுற்றறிக்கையும் வெளியாகி உள்ளது..

வளையல்கள்
"பழங்காலத்திலிருந்தே, இந்துக்கள் பசுக்களை வணங்கி வருகின்றனர், ஆனால், சமீப காலமாக, நகரங்களிலும், மக்கள் பசு வழிபாட்டை மறந்துவிட்டனர்... குறைந்த பட்சம், தீபாவளி பண்டிகையிலாவது, கோவில்களில், மக்கள் பசு வழிபாட்டை கட்டாயமாக நடத்த வேண்டும்.. இந்த சனாதன ஹிந்து தர்ம நடைமுறையை மக்கள் மறந்துவிட மாட்டார்கள், வருங்கால சந்ததியினர் இதை அறிமுகப்படுத்துவார்கள்" என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படித்தான், கடந்த ஆகஸ்ட் மாதம், வரமஹாலக்ஷ்மி பண்டிகையையொட்டி, ஒவ்வொரு பெண் பக்தர்களும், மஞ்சள் மற்றும் ஆறு பச்சை வளையல்களை வழங்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவு ஒன்று பறந்து வந்தது நினைவிருக்கலாம்.. ஆக, உபியை ஒவ்வொரு விஷயத்திலும் முந்தி கொண்டிருக்கிறது கர்நாடக அரசு..!!
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே












Click it and Unblock the Notifications