Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கி எழும் மோதல்! பாயிண்டை பிடித்த தேவகவுடா? காவிரி பிரச்சனையில் பிரதமர் மோடிக்கு பரபர கடிதம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி பிரச்சனையில் பொங்கி வரும் மோதலை குறிப்பிட்டும், அதனை தடுக்க வேண்டும் எனக்கூறியும் பாஜகவின் கூட்டணியில் சமீபத்தில் இணைந்த ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பிரதமர் மோடிக்கு பரபரப்பான கடிதத்தை எழுதியுள்ளார்.

காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்கள் தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதனை நிறைவேற்ற உச்சநீதிமன்றமும் ஆர்டர் போட்டது.

Deve Gowda wrote a letter to PM Modi and requested to intervene on the Cauvery issue

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் பந்த் நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை மண்டியாவில் பந்த் நடந்தது. பெங்களூரில் சில இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதையடுத்து இன்று பெங்களூரில் பந்த் நடத்தப்பட உள்ளது. விவசாயிகள், கன்னட அமைப்பினர் உள்பட 100க்கும் அதிகமான அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த பந்துக்கு ஆதரவு வழங்கி உள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெங்களூரில் பந்த் நடத்தப்பட உள்ளது. விவசாயிகள், கன்னட அமைப்பினர் முக்கிய இடங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிராக போராட்டம் நடத்த உள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக கர்நாடகா-தமிழ்நாடு இடையேயான போக்குவரத்து என்பது பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பஸ்கள், லாரிகள் என அனைத்தும் நேற்று இரவே ஓசூருடன் பயணத்தை முடித்து கொண்டன. அதோடு வரும் 29ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் காவிரி பிரச்சனை என்பது கர்நாடகாவில் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இந்நிலையில் தான் முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா பிரதமர் மோடிக்கு பரபரப்பான கடிதத்தை எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சமீபத்தில் இணைந்த நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடகா-தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீடு செய்வதில் பிரச்சனை உள்ளது. இதற்கு காரணம் கடந்த ஜூன மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்க பருவமழையில் ஏற்பட்ட குறைபாடு தான். இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. சொல்லப்போனால் கர்நாடகாவில் குடிநீருக்கே தண்ணீர் வழங்குவதில் பிரச்சனை உள்ளது. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் பெய்த மழை என்பது கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைவாக பெய்துள்ளது.

புவி நில அமைப்பின்படி தற்போது காவிரி படுகையின் மேல் கரையோர மாநிலமாக கர்நாடகா இருக்கிறது. கீழ்கரையோர மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை எப்போதும் கர்நாடகா நிறைவேற்ற கடமைப்பட்டு இருப்பது என்பது சாபக்கேடு. இதன்மூலம் கர்நாடகாவுக்கு ஆணையிடவும் தமிழகத்துக்கு உரிமை உள்ளது. ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை இல்லாதது மற்றும் அணைகளில் தண்ணீர் இல்லாதது காரணமாக காவிரி நீர் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி தண்ணீர் வழங்க முடியாத சூழல் உள்ளது.

இதற்கிடையே கடந்த 12.09.2023ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அடுத்த 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு 10 ஆயிரம் கனஅடி (13 டிஎம்சி) வழங்க கூறியது. அதன்படி கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீர் திறக்கவில்லை என தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தை நாடியது. இதற்கிடையே கடந்த 13 ம் தேதி அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்த கர்நாடகா அரசு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூறியதுபோல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க உத்தரவிட்டது.

கர்நாடகாவில் 4 அணைகளில் தற்போது 51.10 டிஎம்சி மட்டுமே உள்ளது. ஆனால் கர்நாடகாவில் உள்ள பயிர்கள் மற்றும் குடிநீருக்கு அடுத்த 9 மாதங்களில் 112 டிஎம்சி தண்ணீர் தேவையாக உள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் 22ம் தேதி வரை 40 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குடிநீரை வழங்குவது அரசியலமைப்பின் கீழ் ஒரு அடிப்படை உரிமை என்பதால் தேசிய நீர்க் கொள்கையில் அதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாலும் இது நியாயமற்றதாக உள்ளது. மேலும் சமத்துவம் மற்றும் இயற்கை நீதியின் அனைத்து கொள்கைகளுக்கும் எதிரானதாக உள்ளது.

இதனால் இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். நீங்களும்(பிரதமர் மோடி) நேரடியாக தலையிட வேண்டும். மேலும் 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து கர்நாடகா அணைகளின் நிலவரத்தை அறிய வேண்டும். இது நடந்தால் பொங்கி எழும் மோதல் அதிகரிப்பதை தவிர்ப்பதற்கான இடைக்கால நடவடிக்கையாக இருக்கும். நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்'' என கூறியுள்ளார்.

மேலும் இந்த கடிதத்தில் கர்நாடகாவில் கேஆர்எஸ், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட 4 அணைகளில் மொத்தம் 51.0 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது எனவும், தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் அளவு குறித்த விபரம், மேலும் கர்நாடகா காவிரி படுகை பயிர்களுக்கும் , கர்நாடகாவில் அடுத்த 9 மாதங்களுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு குறித்த பட்டியலையும் இணைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+