அந்த விஷயம் என்னை கடுமையாக பாதித்தது.. பாஜகவின் முக்கிய உறுப்பினர் மீது டிகே சிவக்குமார் வழக்கு!
முன்னாள் அமைச்சரும் பாஜகவை சேர்ந்த முக்கிய உறுப்பினருமான பி பாட்டில் யட்னால் மீது காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார் வழக்கு போட்டுள்ளார்.
பெங்களூர்: முன்னாள் அமைச்சரும் பாஜகவை சேர்ந்த முக்கிய உறுப்பினருமான பி பாட்டில் யட்னால் மீது காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார் வழக்கு போட்டுள்ளார்.
கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்த்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.மஜத - காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் 17 பேர் ராஜினாமா கடிதம் அளித்ததால் ஆட்சி கவிழ்ந்தது.

கடந்த வாரம் திங்கள் அன்று வாரம் பெரும்பான்மையை நிரூபித்த எடியூரப்பா 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார். இந்த தோல்வி காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர்களை கலங்கடித்துள்ளது.
அதே சமயம் காங்கிரஸ் கட்சியிலேயே சில தலைவர்கள் ஆட்சி கவிழ வேண்டும் என்று பின்வேலை பார்த்தார்கள் என்று புகார் எழுந்துள்ளது. முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார், ஆட்சி கவிழ வேண்டும் என்று மறைமுகமாக வேலை பார்த்தார் என்று பாஜகவை சேர்ந்த முக்கிய உறுப்பினரான பி பாட்டில் யட்னால் குற்றச்சாட்டு வைத்தார்.
அதாவது டிகே சிவக்குமார் மஜத ஆட்சி கவிழ வேண்டும் என்று மறைமுகமாக வேலை பார்த்தார். சிவக்குமார் மீது நிறைய வழக்கு உள்ளது. பாஜகவை அரசு இதை வைத்து அவரை லாக் செய்யும் என்பதால் அவர் மஜத ஆட்சிக்கு எதிராக செயல்ப்பட்டார் என்று யட்னால் கூறினார்.
இதனால் கோபம் அடைந்த டி கே சிவக்குமார் தற்போது பி பாட்டில் யட்னால் மீது வழக்கு தொடுத்துள்ளார். பி பாட்டில் யட்னால் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்த சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
அதில், நான் மத்திய அரசின் உதவியை நாடியதாக யட்னால் கூறியுள்ளார். நான் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறைக்கு பயந்து மத்திய அரசுக்கு மறைமுகமாக உதவி செய்தேன் என்று அவர் கூறியுள்ளார். அதேபோல் பாஜக ஆட்சி அமைக்க நான் உதவினேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதை கேட்க எனக்கு வருத்தமாக இருந்தது. அதேபோல் இது என்னுடைய தூய்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இருந்தது. நான் சாதாரண காங்கிரஸ் உறுப்பினர்.
நான் எங்கும் பின் வாசல் வழியாக வர மாட்டேன். எனக்கு முதுகில் குத்த தெரியாது. ஆனால் என்னையே அவர் களங்கப்படுத்தும் அளவிற்கு பேசிவிட்டார். அதனால் அவருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளேன், என்று சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications