மகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.. டி.கே சிவக்குமாரை அதிர வைத்த அமலாக்கத்துறை.. எல்லா பக்கமும் கேட்!
Recommended Video
பெங்களூர்: காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமாரின் மகளுக்கும் தற்போது அமலாக்கத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது திஹார் சிறையில் இருகிறார். அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் டி கே சிவக்குமார் தற்போது அமலாக்கத்துறையின் கஸ்டடியில் உள்ளார்.
கடந்த வாரம் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டார். ஹவாலா மோசடி, வரி ஏய்ப்பு, முறைகேடாக பணம் சேர்ந்தது உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் தற்போது டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

காவல்
டிகே சிவக்குமாருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிபிஐ கோர்ட் மறுத்துவிட்டது. டிகே சிவக்குமாரை அமலாக்கத்துறை 10 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 13ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடும் கேள்வி
இந்த வழக்கில் இதுவரை 88 மணி நேரம் டி கே சிவக்குமார் கேள்வி கேட்கப்பட்டு, விசாரிக்கப்பட்டுள்ளார். இவர் மீது கடுமையான கேள்விகளை அமலாக்கத்துறை எழுப்பி வருகிறது என்றும் கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் அவரின் குடும்ப உறுப்பினர்களை அமலாக்கத்துறை குறி வைக்க தொடங்கி உள்ளது.

நோட்டீஸ்
அதன்படி டிகே சிவக்குமாரின் மகளுக்கும் தற்போது அமலாக்கத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த நோட்டீஸுக்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை சிவக்குமாரின் மகளுக்கு அமலாக்கத்துறை எழுப்பி உள்ளது.

கடுமை
சிவக்குமார் மகளுக்கும் முறைகேட்டிற்கும் தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை சந்தேகம் கொண்டுள்ளது. இது மட்டுமில்லாமல் சிவக்குமாருக்கு காவல் நீட்டிக்கவும் அமலாக்கத்துறை கோரிக்கை வைக்க உள்ளது. கூடுதலாக 5 நாட்கள் காவல் கேட்டு அமலாக்கத்துறை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதேபோல் சிவக்குமாரின் மற்ற குடும்பத்தினருக்கும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சிவகுமார் சிவபெருமான் ஆன கதை.. அப்ப தான் பதவியேற்றார், அதுக்குள்ள கெட்டப்பால் கொந்தளிக்குது கர்நாடகா -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications