இரக்கமே இல்லையா.. ஓடும் காரில் கதறிய மாணவி.. பெங்களூர் ரேபிடோ கார் டிரைவரின் வக்கிர புத்தியால் ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் இரவு நேரத்தில் 21 வயது கல்லூரி மாணவி ‛ரேபிடோ' காரில் பயணம் செய்தார். அப்போது கல்லூரி மாணவியிடம் ஆபாச சைகை காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக ரேபிடோ கார் டிரைவர் மீது புகார் எழுந்துள்ளது. மேலும் மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வாடகை கார் டிரைவர் அவரை பாதி வழியில் கீழே தள்ளிவிட்டு சென்றது திடுக்கிட வைத்துள்ளது.
நோபளத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பெங்களூரில் தங்கி தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் தான் இரவில் அவர் கல்யாண் நகருக்கு சென்று டின்னர் சாப்பிட்டார். அதன்பிறகு அங்கிருந்து சேழதேவனஹள்ளிக்கு புறப்பட்டார்.

இதற்காக கல்லூரி மாணவி ரேபிடோ காரை முன்பதிவு செய்தார். ரேபிடோ காரும் வந்தது. மாணவி காரில் ஏறி பயணித்து கொண்டிருந்தார். அப்போது தான் டிரைவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.
கல்லூரி மாணவியை டிரைவர் தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி மாணவியை பார்த்து ஆபாச சைகை காண்பித்துள்ளார். ஆனால் கல்லூரி மாணவி கண்டுக்கொள்ளவில்லை. பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் அவர் அமைதியாக இருந்தார். ஆனால் இந்த அமைதியை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரேபிடோ டிரைவர் இளம்பெண்ணிடம் எல்லை மீறி நடந்து கொண்டார்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். தொடக்கூடாத இடங்களை தொட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தினார். காப்பாற்றும்படி அவர் உதவி கோரினார். இதனால் பயந்துபோன கார் டிரைவர் மாணவியை பாதி வழியில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி சோழதேவனஹள்ளி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் ரேபிடோ டிரைவரின் பெயர் சோமா என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் நடந்த பிறகு அவர் பணிக்கு செல்லவில்லை. தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தற்போது சோமாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
யாருக்கு பிறந்த குழந்தை.. சந்தேக கணவனால் பறிபோன போலீஸ் ஹோம் கார்டு உயிர் -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக்












Click it and Unblock the Notifications