மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்.. சென்னையில் இருந்து சென்ற 4 பேர் பலி.. கோர விபத்து
பெங்களூர்: சென்னையில் இருந்து 4 பேர் பெங்களூருவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலையில் கோலார் மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது தடுப்பு சுவரில் மோதி அவர்களின் கார் கீழே விழுந்தது. இதில் 4 பேர் பலியாகினர்.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் காரிடாரில் நேற்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.

அந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் காரில் பயணித்த 4 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கோலாரில் உள்ள ஆர்எல் ஜாலப்பா மருத்துவமனையில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். விசாரணையில் இறந்தவர்களின் பெயர்கள் ஹரிஹரன் (வயது 27), கோி(38), கவுதம் ரமேஷ் (28), ஜெயசங்கர் (30) என்பது தெரியவந்தது.
இவர்கள் 4 பேரும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினர். சென்னை வந்துவிட்டு நேற்று காலையில் மீண்டும் பணிக்காக பெங்களூர் சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர். அதாவது ஐயப்பா சாமிக்கு மாலை அணிந்திருந்த ஹரிஹரன் காரை ஓட்டினார். மாலூர் அருகே மேம்பாலத்தில் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்து விபத்தில் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications