வாட்டும் வறட்சி.. மழை வேண்டி கர்நாடகாவில் தவளைகளுக்கு தாலி கட்டி கல்யாணம் செய்த பொதுமக்கள்!- வீடியோ
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் கடுமையான வறட்சி வாட்டி வதைத்து வரும் நிலையில் மழை வேண்டி மக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தடுமாறி வருகின்றன.

பருவமழைகள் கைக்கொடுக்காத நிலையில் கோடை மழையும் ஏமாற்றியதால் நாடு முழுவதும் பெரும் வறட்சி நிலவி வருகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ளது.
#WATCH Frogs married in Karnataka's Udupi to please the rain gods. The frogs were dressed in custom made outfits for the ceremony. pic.twitter.com/s9I4rLT0Tu
— ANI (@ANI) June 8, 2019
இதேபோல் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கடுமையான வெப்பமும் வறட்சியும் நிலவி வருகிறது. இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மழை வேண்டி கர்நாடக மாநிலம் உடுப்பியில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மணமக்களை போன்றே தவளைகளுக்கும் திருமண உடை உடுத்தி மாலை அணிவித்து மேளதாளம் முழங்க தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் முடிந்த கையோடு மணமக்களான தவளைகள் மீது அட்சதையும் தூவப்பட்டது.
வழக்கமாக மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும். இந்நிலையில் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்ட இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications