பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடிமேல் அடி.. குமாரசாமி அரசுக்கு ஆதரவு இல்லை.. ஆளுநரிடம் கடிதம் கொடுத்த சுயேச்சை எம்எல்ஏ

Google Oneindia Tamil News

Recommended Video

    கூண்டோடு ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்கள்..கர்நாடகாவில் ஆட்சி கவிழ்கிறது?- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ள சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ், தனது ஆதரவு பாஜகவுக்கு என்று அறிவித்துள்ளார்.

    கோலார் மாவட்டம் முல்பாகல் தொகுதியிலிருந்து சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாகேஷ். கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவை விஸ்தரிப்பின்போது, இவருக்கு அமைச்சர் பதவி வழங்கினார் முதல்வர் குமாரசாமி. பாஜக ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுத்தால், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு உதவுவார் என்பதற்காக அவருக்கு அமைச்சர் பதவி கூப்பிட்டு கொடுத்தார் குமாரசாமி.

    H.Nagesh, independent MLA withdraw his support to the Karnataka government

    ஆனால் அமைச்சராக பதவியேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இன்று ஆளுநர் வஜுபாய் வாலாவை, சந்தித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார் நாகேஷ். மேலும், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    பாஜகவுக்கு காங்கிரஸ், மஜத பலே பதிலடி.. கர்நாடக அரசை காப்பாற்ற கையில் எடுத்த 'காமராஜர் பார்முலா' பாஜகவுக்கு காங்கிரஸ், மஜத பலே பதிலடி.. கர்நாடக அரசை காப்பாற்ற கையில் எடுத்த 'காமராஜர் பார்முலா'

    இதையடுத்து பெங்களூர், ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக மும்பை கிளம்பி சென்றுள்ளார் நாகேஷ். அங்கு ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஆட்சிக்கு எதிராக கலகம் செய்யக்கூடிய 11 எம்எல்ஏக்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இவரும் சென்று தங்க உள்ளார்.

    H.Nagesh, independent MLA withdraw his support to the Karnataka government

    H.Nagesh, independent MLA withdraw his support to the Karnataka government

    இது மட்டுமின்றி, தனது ஆதரவு பாஜகவுக்கு தான் என்று நாகேஷ் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் என்னதான் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று பாஜக தலைவர்கள் கூறினாலும்கூட கர்நாடக அரசை கலைப்பதில் பாஜக மும்முரமாக இருப்பதை உறுதி செய்துவிட்டார் நாகேஷ்.

    English summary
    H.Nagesh, Independent MLA from Mulbagal, who got ministerial berth from Kumaraswamy government reigned his post and withdraw his support to the Karnataka government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X