"பாஜககாரங்க வருவாங்க.. கால்ல இருக்குறத ரெடியா வெச்சுக்கோங்க".. சொல்றது யார்னு பாருங்க.. அதிரும் தாமரை
"கடந்த 5 ஆண்டுகாலமாக பாஜகவினர் என்ன செய்தார்கள்? பசுக்களை காப்பாற்றினார்களா? இந்துத்துவாவுக்காக உழைத்தார்களா? அவர்கள் எதையும் செய்யவில்லை"
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவினரையும் எந்த லெவலுக்கு இறங்க முடியுமோ, அந்த அளவுக்கு இறங்கி அட்டாக் செய்து வருகிறார் இந்து சேனா அமைப்பின் தலைவர் ப்ரமோத் முத்தாலிக்.
அந்த வகையில், தற்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சொல்லி பாஜகவினர் யாரேனும் ஓட்டு கேட்டு வந்தால் அவர்களை செருப்பால் அடிக்குமாறு கூறியிருப்பது பாஜகவினரை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிராக ப்ரமோத் முத்தாலிக் வீதிவீதியாக இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பாஜகவுக்கு எதிராக..
கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதையடுத்து, ஆளும் பாஜகவும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சில இந்து அமைப்புகளின் தலைவர்கள் பாஜகவினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் இந்து சேனா தலைவர் ப்ரமோத் முத்தாலிக் முக்கியமானவர்.

போலி இந்துத்துவா
இவர் கடந்த சில நாட்களாக பேசும் பேச்சுகள் பெரும் சர்ச்சைகளாகி வருகின்றன. குறிப்பாக, லவ் ஜிகாத் தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த ப்ரமோத் முத்தாலிக், "லவ் ஜிகாத்தில் ஒரு இந்து பெண்ணை நாம் இழந்தால், 10 முஸ்லிம் பெண்களை இந்து இளைஞர்கள் காதல் வலையில் வீழ்த்த வேண்டும்" என பேசியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதுபோல, பாஜகவை 'போலி இந்துத்துவா' என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பசுக்களை காப்பாற்றினார்களா?
இந்நிலையில், நேற்று பெங்களூரில் ப்ரமோத் முத்தாலிக் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், "கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகாலமாக பாஜகவினர் என்ன செய்தார்கள்? பசுக்களை காப்பாற்றினார்களா? இந்துத்துவாவுக்காக உழைத்தார்களா? அவர்கள் எதையும் செய்யவில்லை. இந்துக்களின் நலனுக்காக எந்தவொரு திட்டத்தையும் பாஜக கொண்டு வரவில்லை. அவரகள் எதற்கும் பயனற்றவர்கள். ஆனால் இப்போது தேர்தல் வந்துவிட்டதால், "இந்து" "இந்து" எனக் கூச்சலிட்டுக் கொண்டு அவர்கள் வருவார்கள்.

செருப்பால் அடியுங்கள்
பாஜகவினரை பார்த்து ஒன்று கேட்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், மோடியின் பெயரை பயன்படுத்தாமல் நீங்கள் ஓட்டு கேட்க வேண்டும். அது உங்களால் முடியுமா? மக்களே.. நன்றாக கேளுங்கள். உங்கள் வீட்டுக்கு ஓட்டு கேட்டு பாஜகவினர் நிச்சயம் வருவார்கள். அப்போது அவர்கள் மோடிக்கு வாக்களிக்குமாறு கூறினால், அவர்களை செருப்பால் அடியுங்கள். அவர்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். அது மோடி பெயரை கூறுவது மட்டும்தான். அவர்களுக்காக உழைக்கும் தொண்டர்களின் பிரச்சினை அவர்களுக்கு புரியாது" என ப்ரமோத் முத்தாலிக் பேசினார்.

ஆட்சிக்கட்டில்
இங்கு இன்னொரு விஷயத்தையும் நினைவுகூரவேண்டி உள்ளது.. கர்நாடகாவில், கடந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைத்தன... ஆனால் அதன் ஆட்சி காலம் முடிவதற்குள்ளேயே அதன் எம்எல்ஏ பாஜகவிற்கு தாவினார்கள்.. அதாவது, ஒரு எம்எல்ஏவுக்கு பல கோடியில் விலை நிர்ணயித்து, கட்சி மாற வைக்கும் வியூகத்தினால்தான், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தன்னுடைய ஆட்சியையே இழந்தது... இதையடுத்துதான், பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக தற்போதுவரை இருந்து வருகிறது.

கூடும் நெருக்கடிகள்
எனினும், ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. ஒருபக்கம் வீர்யமிக்க பிரச்சாரம் நடந்துவரும்போதிலும்கூட, மறுபக்கம், கர்நாடகாவில் அரசு பணிகளை டெண்டர் எடுக்க 40 சதவிகித கமிஷன் கொடுக்க வேண்டும் என்பது பாஜகவின் கரும்புள்ளியாக காட்சி தந்து கொண்டிருக்கிறது... அதுமட்டுமல்ல, லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது நடத்தியுள்ள ரெய்டில், கர்நாடக பாஜக எம்எல்ஏ லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றவாளியாக அதில் சேர்த்துள்ளது.. இதனிடையே, பாஜக ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் ஊழலை ஒழிப்போம் என்று அமித்ஷா பேசியதும் பேசுபொருளானது... இப்படி நாலாபக்கமும் பாஜக மீதான சலசலப்புகள் கூடிவரும்நிலையில், பிரதமர் மோடியின் பெயரை சொல்லி பாஜகவினர் ஓட்டு கேட்க வந்தால், அவர்களை செருப்பால் அடிங்கள் என்று இந்து அமைப்பின் தலைவரே பேசியுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications