பாஜகவை தெறிக்க விட்ட காங். மஜத கூட்டணி... காவிக்கொடியை இறக்கியது எப்படி?
Recommended Video

பெங்களூரு : கர்நாடகாவில் நடைபெற்ற லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது பாஜகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் பெல்லாரி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் உக்ரப்பா பாஜக வேட்பாளரை விட 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த போது முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஒரு கருத்தை ட்வீட் செய்திருந்தார். "பெல்லாரி மக்கள் தீபாவளி நாளில் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளனர்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
பெல்லாரியில் காங்கிரஸ் பெற்ற வெற்றி பாஜகவை மட்டுமல்ல ஒட்டு மொத்த ரெட்டி குடும்பத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வெற்றியை காங்கிரஸ் தனது வசமாக்கியுள்ளது. நேற்றைய தேர்தல் முடிவின் எதிரொலியாக பாஜக தலைமை அலுவலகம் கலை இழந்து காணப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த பாஜக
பொதுத்தேர்தலுக்கு பாஜக தயாராகி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த அமோக வெற்றி காவிக் கட்சியை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஷிமோகா, பெல்லாரி,மாண்டியா லோக்சபா தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த போது பெல்லாரியில் போட்டியிட வலிமையான வேட்பாளர் கூட காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.

ஒற்றுமையால் வசமான வெற்றி
இதனையடுத்து பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு கடைசியாக தொகுதிக்கு வெளியே இருந்து ஒருவரை வேட்பாளராக நியமித்தது. மேல்சபை உறுப்பினர் உக்ரப்பா பெல்லாரியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் 3 பெரும் தலைவர்களான சித்தராமையா, தினேஷ் குண்டோராவ், சிவக்குமார் உள்ளிட்டோர் பிஜேபியை ரெட்டி சகோதரர்களின் கோட்டையில் தகர்க்க திட்டம்போட்டது. வாக்காளர்களை நேரில் சந்திக்க 80 சிறு மற்றும் பெரிய தலைவர்கள் இந்த மாவட்டத்தில் நியமிக்கப்பட்டனர். இதே போன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையேயான வேறுபாடுகளையும் களைந்தனர்.

ரெட்டி சகோதரர்களின் கோட்டை
ஸ்ரீராமுலு மற்றும் ரெட்டி சகோதரர்களால் பாஜக பிரச்சாரமானது முன்னெடுக்கப்பட்டது. எடிரப்பா உள்ளிட்ட முக்கித் தலைவர்களும் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்த போது ரெட்டி சகோதரர்களை மையப்படுத்தியே தேர்தல் நகர்வுகள் இருந்தது. எனினும் தேர்தலில் அடைந்த தோல்விக்கு தாம் முழு பொறுப்பேற்பதாக ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

அதீத நம்பிக்கைக்கு கிடைத்த அடி
பெலாரியில் பெற்ற வெற்றியானது காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட்டதே காரணம் என்பதை உணர்ந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சிவக்குமாரும் இது காங்கிரஸ் கட்சியின் வெற்றியல்ல, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவின் அதீத நம்பிக்கைக்கு காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி வெடிகுண்டை வீசியுள்ளது.

பாஜகவிற்கு இனி இருள் தான்
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணி அரசை கவிழ்க்க நினைக்கும் பாஜகவிற்கு இது மரண அடியாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தேவகவுடா மற்றும் முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோரும் இந்த வெற்றி மாநிலத்தில் பாஜகவின் ஆட்சிக்கு முடிவு வந்தவிட்டது என்பதை உணர்த்தியுள்ளதாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications