கர்நாடகாவில் 20 வருஷமாக காங்கிரசுக்கு அல்வா கொடுக்கும் பாஜக! எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: லோக்சபா தேர்தலில் கடந்த 20 ஆண்டுகளாக கர்நாடகாவில் பாஜகவின் கையே ஓங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகா தொடர்ந்து அல்வா கொடுத்து வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்ப்போம்.

கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 26ம் தேதி முதற்கட்டமாகவும், மே 7 ம் தேதி 2வது கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சியாக உள்ளன காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. ஆனால் பாஜக, முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கடந்த 1999 லோக்சபா தேர்தலில காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றது. இதில் சோனியா காந்தி பல்லாரி தொகுதியில் வெற்றி பெற்றார்.

How Congress lost with BJP on last 20 years in Karnataka Lok Sabha Election

அதன்பிறகு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறவில்லை. 2004, 2009, 2014, 2019 ஆகிய லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் தான் வெற்றி பெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 2019 தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளில் வென்றது.

காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் வென்றது. மண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரீஷ் மனைவி சுமலதா சுயேச்சையாகவும், ஹாசனில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வெல் ரேவண்ணாவும் வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்பதற்கும், பாஜகவினர் கை ஓங்கி இருப்பதற்குமான காரணத்தை இணைக்கப்பட்டுள்ள வீடியோவை கிளிக் செய்து விரிவாக பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+