‛‛மாறாத மனைவியின் மோகம்’’.. கணவரின் உயிரை பறித்த இன்ஸ்டாகிராம் ‛ரீல்ஸ்’.. கர்நாடகாவில் சோகம்
பெங்களூர்: கர்நாடகாவில் மனைவியின் தொடர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவு இளைஞர் ஒருவரின் உயிரையே பறித்துள்ள பெரும் சோக சம்பவம் நடந்துள்ளது.
தற்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதை அதிகமானவர்கள் விரும்புகின்றனர். சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரீல்ஸ் செய்கின்றனர். இந்தியாவில் ‛டிக் டாக்' தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதில் சிலர் கணவன்-மனைவியாகவும், நண்பர்களுடன் சேர்ந்தும், தனியாகவும் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமடைகின்றனர். அதன்பிறகு குறிப்பிட்ட தயாரிப்புகள், நிறுவனங்கள் குறித்து ‛ப்ரோமோஷன்' செய்து பணமும் சம்பாதிக்கின்றனர். இதனால் அனைத்து வயதினர் இடையேயும் ‛ரீல்ஸ்' மோகம் என்பது அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.
இத்தகைய சூழலில் தான் இன்ஸ்டாகிராம் ‛ரீல்ஸ்' ஒருவரின் உயிரை பறித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அந்த நபரின் மரணத்துக்கு இன்ஸ்டாகிராம் ‛ரீல்ஸ்' எப்படி காரணமானது, இறந்த நபர் யார்? என்பது பற்றிய விபரம் வருமாறு: கர்நாடகா மாநிலம் சாமராஜ் நகர் மாவட்டம் ஹனுர் பிஜி பாளையாவை சேர்ந்தவர் குமார் (வயது 33). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவி பெயர் ரூபா.
குமார் - ரூபா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளன. குமார் கூலி வேலை செய்து வந்தார். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து மனைவி, 2 மகள்களுக்கான தேவையை பூர்த்தி செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவரும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து கோபமடைந்த ரூபா கணவர் குமாரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றார்.
ரூபாவை பொறுத்தமட்டில் அவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான கன்னட பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். இது குமாருக்கு பிடிக்கவில்லை என்றாலும் ரூபா தனது நடவடிக்கையை மாற்றி கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் குமாரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்ற ரூபா அங்கேயும் சும்மா இருக்கவில்லை. அவர் சிலருடன் சேர்ந்து ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை குமாரின் நண்பர்கள் பார்த்துள்ளனர். மேலும் அவர்கள் குமாரை கிண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து குமார் தனது மனைவி ரூபாவுக்கு போன் செய்து ரீல்ஸ் பற்றி கேட்டுள்ளதோடு, இனி ரீல்ஸ் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ரூபா அதனை ஏற்கவில்லை. இத்தகைய சூழலில் மனம் உடைந்த குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, ‛‛குமாருக்கும், ரூபாவுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளன. குமார் கூலி வேலை செய்தார். குமாருக்கு மபானம் குடிக்கும் பழக்கத்தால் தம்பதி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என தெரிவித்தனர்.
ஆனால் குமாரின் குடும்பத்தினர் வேறு காரணத்தை கூறுகின்றனர். அதாவது மனைவி ரூபா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்தார். சமீபத்தில் இன்னொரு ஆண், பெண்ணுடன் சேர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு இருந்தார். இதனால் குமாரின் நண்பர்கள் அவரை கிண்டல் செய்தனர். இதில் மனம் உடைந்த குமார் தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications